தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக பட்டியல் படுத்துவதாக இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அமைதி வழிப் போராட்டங்களின் மூலம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள கருத்து பாராட்டுக்குரியதென இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி கிரேஜ் சுவில்லியன் தெரிவித்துள்ளார்.
எனினும், பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரவேசத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், புலிகளுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
palli.
புலி அழிந்து விட்டது என்பதை அமெரிக்கா நம்ப்ப மறுக்கிறதா? அல்லது KP க்கும் ஆப்பு வைக்க அடி கோலுகிறதா? ஒண்ணுமே புரியலே சாமிங்களா? அது சரி இந்த பிள்ளை உருத்திரா ஏன் பேசாமல் இருக்கிறார்;சட்டத்தில் புகுந்து ஒரு பிடி பிடிக்கலாமே; அப்பதானை தம்பியின் தம்பிகளுக்கு இவர் மேலை ஒரு நம்பிக்கை பிறக்கும்;அவரும் ஏதோ ஒரு அமைப்பு கட்ட போவதாக செய்திகள் தாறுமாறாய் அலையுதே; (புலம் பெயர் ரமில் ஈல தறுதலை சருகுபுழிகள்) யாராவது ஒரு போனை போட்டு அமெரிக்காவிடம் விலக்கம்(ள) கேளுங்கோ; இல்லாவிட்டால் இது பண்ணி காச்சல் மாதிரி பலநாடுகள் பரவ வாய்பதிகம்.
மகுடி
ஒபாமா டமில் தடையை நீடிக்க வைக்க உதவியதோ?
BC
ஒபாமாவுக்கான தமிழ் மக்கள் அமைப்பு என்பது தான் புலி ஆதரவாளர்களின் தன்மானத்துக்கும் வீரத்திற்க்கும் எடுத்துக்காட்டாகும்.
பார்த்திபன்
பல்லி,
நிசப்புலிகள் அழிந்து விட்டாலும், இப்ப சில எலிகள் புலிவேசம் கட்ட வெளிக்கிட்டிருக்கினம். அவைக்கு ஆப்பு வைக்க கொஞ்ச நாட்களுக்கு இந்தப் புலித்தடை தொடரத்தான் வேண்டும்.
palli.
பார்த்திபன் இந்த எலியில் ஒன்று நேற்று என்னிடம் கேட்டுது பல்லி தலைவர் இருக்கிறாரா இல்லையா என ;நானும் அவன் அன்புடன் கேப்பதாக நினைத்து(அவர் கேட்டது வம்புடன்) இல்லை எனதான் பலர் கதைக்கினம்; நடக்கும் சம்பவங்களை பார்த்தால் அது உன்மையாக இருக்குமோ என எண்ண தோன்றுகிறது என தன்மையாகதான் சொன்னேன்; அவரிடம் இருந்து வந்த முதல் வார்த்தை துரோகி; நீயெல்லாம் ஒரு மனிதனா.,? எமது இனத்துக்காக தன் உயிரையும் கொடுக்க துணிந்த எம் தலைவனை உன்னால் எப்படி இறந்து விட்டார் என சொல்ல முடியும் என ஒரு 10நிமிடம் என்னை பேசவிடாது தன்பாட்டுக்கு பேசி விட்டு போகும்போது இனிமேலாவது புத்திசாலிதனமாக நடந்து கொள்என எச்செரிக்கை விட்டு விட்டுசென்றார்; பல்லி அவருக்கு பயந்தோ அல்லது அவர் என்னை ஏசியதை எண்ணியோ ஒரு துளிகூட கவலை இல்லை; ஆனால் இத்தனைக்கும் பின்னும் இந்த மானிட பிறவிகள் இப்படி ஆறாவது அறிவை அடைவு (புலியிடம்) வைத்து விட்டு மீக்க முடியாமல் முக்குவதை நினைத்தால்தான் வேதனையாக உள்ளது.
மாயா
பல்லியின் பல் தப்பியதில் சந்தோஷம். இல்லையென்றால் தேசத்தில சப்பித் துப்பவும் பல் இருக்காது. பல்லிகள் எல்லாம் புலிகளோடு பேசக் கூடாது. சிங்கங்களுக்கு மட்டுமே அது முடியும்? அதுக்கு அதுமாதிரி பேச வேணும்.
எழுதுங்கோ ஆருக்கும் இதுதான் பல்லியெண்டு தெரியாது. பேசாதேங்கோ….. ஈழத் தமிழனாவது ஓரளவு நம்புறாங்கள்.தமிழ்நாட்டு தமிழன் பிரபாகரன் செத்திருந்தால் கலைஞர் கவிதைப்பா பாடியிருப்பார். வைகோவுக்கு வன்னியோட நேரடி தொடர்பு அவரே சொல்லியிருப்பார்……என்று எமக்கே கதை சொல்லுறாங்கள். மாவீரர்நாள் வரைக்கும் புலிகள் குறித்து பேசாமல் இருப்போம்? தலைவர் செத்துட்டார் என்பவன் துரோகியென்று நாமும் ஒத்துப்பாடுவோம். வேற வழி?