சர்வதேச கடற்பரப்பில் கப்டன் அலி கப்பல்

ships000.jpgமோதல் களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களுடன் வந்த கப்டன் அலி (வணங்கா மண்) கப்பல் இந்திய கடற்பரப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த கப்டன் அலி கப்பலை இலங்கை கடற்படையினர், நிவாரணப் பொருட்களை இறக்காமலேயே திருப்பி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Constantine
    Constantine

    Who is paying the rent for this ship? Is it worth it D D Moorthy?

    What happened to the 14 days notice given by ‘Eelamaran’ to Doggy Doctor Moorthy? – Only words no action – Mr. Eelamaran ? Please organize a protest and we will participate.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இறுதியாக பிபிசி தமிழோசை மூலம் கிடைத்த செய்தி

    ஐரோப்பாவிலிருந்து கப்பலில் வந்த நிவாரணப் பொருட்களை இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக தமிழ் அகதிகளுக்கு வழங்க இலங்கை சம்மதம்: இந்திய வெளியுறவு அமைச்சர்

    இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஐரோப்பாவில் திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்களைக் கொண்டுவந்த கேப்டன் அலி என்ற கப்பலிலிருந்து அந்தப் பொருட்கள் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்ற இந்திய அரசின் வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

    இலங்கை அரசின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச, இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய குழுவினரை சந்தித்த பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த விபரத்தை வெளியிட்டுள்ளார்.

    Reply
  • மாயா
    மாயா

    இடைத்தங்கல் முகாம்களில் உள்ள அகதிகள் ஆறு மாதத்தின் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தன்னிடம் உறுதி வழங்கியதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மேலும் கச்சத்தீவில் ராணுவ கட்டுமான அமைப்புகள் எதையும் உருவாக்கப்போவதில்லை என்று இலங்கை அரசு தெளிவாக்கியதாகவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

    http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml

    Reply
  • நண்பன்
    நண்பன்

    அலி கப்பலில் உள்ள பொருட்கள் சென்னை துறைமுகத்தில் இறக்கப்பட்டு அது இந்திய செஞ்சிலுவை சங்கம் ஊடாகவே இலங்கைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக அறிய வருகிறது. இதை இலங்கை – இந்திய அரசுகள் தெரிவித்துள்ளதோடு, இதை மர்சி மிஸன் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

    வணங்கா அலியை வைத்து அரசியல் செய்ய முயலும் சில பின்னணிகளை கருத்தில் கொண்டு , அலியை அப்பகுதியை விட்டு வெளியேற்றவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இறக்கப்படும் பொருட்கள் இலங்கைக்கு போகுமா? போகாதா என்பது இலங்கை செஞ்சிலுவை சங்க பரிசீலைனைக்குப் பின்னரே முடிவாகலாம்?

    Reply