யாழ். இரவுநேர பஸ் சேவையில் மாற்றம்

jaffna_town.jpgயாழ்ப் பாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்ட நேரத்தில் இப்போது  மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதைத்  தொடர்ந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்து யாழ். குடா நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான இறுதி பஸ் சேவை நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

புதிய நேரப்படி இந்த பஸ் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் என வட பிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் பதில் பொது முகாமையாளர் எஸ். சிவனேந்திரன் அறிவித்தள்ளார்.

இரவு 9.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுவந்த ஊரடங்குச் சட்டம் தற்போது 11.00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.   இதனால், யாழ்ப்பாணத்தில் கடந்த பல வருடங்களாக இரவில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்த நிலைமை மாறி,பொது மக்கள் இரவு நேரத்திலும் படிப்படியாக நடமாடத் தொடங்கியுள்ளனர்.

வர்த்தக நிலையங்களும் இரவு 7.00 மணிவரை திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தக் கூடிய நிலையும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • chandran.raja
    chandran.raja

    இதுதெல்லாம் எமக்கு எதை உணர்த்துகிறது?
    தமிழ்மக்களின் வாழ்வின் உயர்வையா? தாழ்வையா??

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    “இதுதெல்லாம் எமக்கு எதை உணர்த்துகிறது?
    தமிழ்மக்களின் வாழ்வின் உயர்வையா? தாழ்வையா”

    தேர்தல் வருவதைத்தான் உணர்த்துகின்றன. யாழ் மக்களோடு உரையாடிப் பாருங்கள்- பயந்து பயந்து ஒவ்வொரு வார்த்தையாக பேசுகிறார்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வந்தியதேவன் பொடிவைத்து கதைப்பதை விட்டு புலிகளால் வன்னியில் நடத்தி வைக்கப்பட்ட “ஏழாம் உலகப்பற்றி ” சிந்தியுங்கள். சில வேளை நீங்கள் தெளிவு பெறலாம். எமது இனத்திற்கு நன்மை பயிற்கலாம்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    புலி இலங்கை மக்களுக்கு சொல்லெணா துன்பத்தை விளைவித்தது. இலங்கை அரசு என்ன செய்திருக்க வேண்டும்? புலிகளை ஒழித்த மறுகணமே தமிழ் மக்களுக்கு இன்ன இன்ன உரிமைகள் வழங்கப்படும் என சொல்லியிருக்க வேண்டாமா? பெரிய அளவில் இராணுவ முகாங்கள் போடப் போவதாகவும் மூன்று லடசம் இராணுவத்தை சேர்க்கப் போவதாகவும் அல்லவா அறிவித்தது? இது எதைக் காட்டுகிறது? தமிழ மக்களை தொடர்ந்து இராணுவப்பிடியில் வைத்திருக்த்தானே? தமிழ மக்களுக்குரிய சிவில் உரிமைகளை கொடுத்தால் ஏன் அவர்கள் மீண்டும் ஆயுதங்களை நினைக்கப் போகிறார்கள். தமிழ் மக்களுக்கு என்ன உரிமை இல்லை என்று கேட்டு விடாதீர்கள். (இரண்டு கோடி மக்களுக்கு எதற்கு மூன்று லட்சம் இராணுவம் தேவை)

    Reply
  • chandran.raja
    chandran.raja

    கையளவிற்கு உலகம் அடங்கிவிட்டது என தினம்தினம் விலாவாரியாக படித்துக் கொண்டிருக்கிறோம். இலங்கை வரலாற்றிலிருந்து உலகத்தைப் படிப்பதைவிட்டு உலக வரலாற்றிலிருந்து இலங்கையையும் ஆசியா கண்டத்தையும் இந்தியாவையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஏதோ ஒரு பின்னோட்டத்தில் கூறியிருந்தேன். இராணுவபலத்தை இரண்டு லட்சத்தில்லிருந்து மூன்று லட்சமாக உயர்த்துவது பற்றி அது தமிழ்மக்களுக்கு எதிரானது தமிழ்மக்களை அடக்கத்தான் என ஏன்? கற்பனை பண்ணி உங்கள் ஆரோகியத்தையும் கெடுத்து ஒரு கலகலப்பையும் ஏற்படுத்துகிறீர்கள்?

    கடந்தகாலத்தில் “கட்டாயஇராணுவ” அமைப்பை ஏற்படுத்தியவர்கள் தமிழரா? சிங்களவரா? உள்நாட்டு யுத்தகாலத்தில் கூட தமிழ் இராணுவத்தைவிட சிங்கள இராணுவம் மிகவும் கட்டுக்கோப்பாகவே நடந்திருகிறார்கள். அதற்கு ஒவ்வொரு இலங்கை மகனும் தலைவணங்க வேண்டும். இராணுவ எண்ணிக்கையை உயர்த்துவது ஏன் சர்வதேச நெருக்கடிக்கு உட்பட்டதாக இருக்கக்கூடாது. அரசியல் என்பது “கூட்டாஞ்சோறு” பொழுதுபோக்கு விளையாட்டு இல்லையே.

    Reply
  • sankiliyan
    sankiliyan

    NALLAM VARAVETKIROM

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    ““கட்டாயஇராணுவ” அமைப்பை ஏற்படுத்தியவர்கள் தமிழரா? சிங்களவரா”
    கட்டாய இராணுவ ஆட்சேர்ப்புத்தான் போராட்டத்தை குப்புற தள்ளி விழுத்தி விட்டதே.

    “யுத்தகாலத்தில் கூட தமிழ் இராணுவத்தைவிட சிங்கள இராணுவம் மிகவும் கட்டுக்கோப்பாகவே நடந்திருகிறார்கள்”

    உங்கள் நற்சான்றிதழை யார் ஏற்கப் போகின்றார்கள்? மூன்று லட்சம் மக்கள் சிங்கள இராணுவத்தின் கட்டுக் கோப்பிற்கு சாடசியாக உள்ளனர். அவர்கள் பேசும் காலம் வரும்போது தெரியும்.

    இராணுவ எண்ணிக்கையை உயர்த்துவது ஏன் சர்வதேச நெருக்கடிக்கு உட்பட்டதாக இருக்கக்கூடாது.”

    மன்னாரில் உள்ள எண்ணெயை எடுக்க அமெரிக்கா படையோடு வரும்போது சண்டை போடவா மூன்று லடசம் இராணுவத்தை எடுக்கிறார்கள்?

    Reply
  • Rompa pala Nedumaaran
    Rompa pala Nedumaaran

    ஏதோ நம்மட சனம் சந்தோசமா இருக்கட்டுமப்பா. ஐயா டக்ளசுக்கு புண்ணியம் கிடைக்கட்டும். தேர்தலுக்காகவோ அல்லது மக்கள் நலமோ மக்களுக்கு நல்லது யார் செய்தாலும் பாராட்டததானெ வேணும்.

    Reply
  • msri
    msri

    ஓருமணிநேரம் பேரூந்து பிந்திச் செல்வது> தமிழ் மககளின் உயர்வையா? தாழ்வையா? காட்டுகின்றது எனவினாவுகின்றது! “வடக்கின் வசந்த மகிந்த மாணாக்கன்” ஒன்று! ஊரடங்குச்சட்டத்தின் மத்தியில் தேர்தல் நடாத்துவது>டக்கிளசுவின் “ஐனநாயக வசந்தத்தையா? அல்லது இன்னோர் புலியாக (தமிழமக்கள் மத்தியில்) மாறியுள்ள மகிந்தப் பாசிச சர்வாதிகாரத்தையா? காட்டுகின்றது! தமிழ்மக்கள் மத்தியில் “குறுந்தேசிய இனவாதப் புலிகள்” இல்லாது போயுள்ளனர்! பேரினவாதப் புலிகள் வாழ்ந்து கொண்டே இருக்கினறார்கள்!

    Reply
  • Vannikkumaran
    Vannikkumaran

    நண்பர்களே எம்முள் இனியும் தேவையில்லாதவிடயங்களில் தலையிட்டு வாதப்பிரதிவாதங்கள் செய்து காலத்தையும் கையாலாக்தனத்தையும் பறை சாற்ற வேண்டாம்.
    தேசம் நெற் தந்திருக்கும் இந்த அரிய வசதியை பயன்படுத்தி இன்றைய சூழ்நிலையில் தமிழரின் எதிர்கால அரசியல் சமூக நிலை நிலைப்பாடுகளை நிலைப்படுத்த என்ன செய்யலாம் என்று நல்லமனதுடன் ஆராய்வோம்’

    1919முதல் 2009 வரை தமிழரைக் காக்க வென வந்த கட்சிகளும் அதன் தோல்விகளும்
    இலங்கை தேசிய காங்கிரஸ் தோல்வி
    தமிழரசு கட்சி தோல்வி
    தமிழர் விடுதலை கூட்டணி தோல்வி
    தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துக் குழுவினதும் ஆயுதப் போராட்டம் தோல்வி

    அதனால் அவர்களைப்பற்றி கதைத்து நேரத்தையும் வீணடித்து சந்தர்ப்பங்களையும் நழுவவிட்டு விடாமல் அதற்காக உண்மையாக சிந்தித்து செயல்படுவதற்கான களமாக இந்த தேசம் நெற்றைப் பயன் படுத்துங்கள். அதைவிட்டு மற்றவர்க்கும் சமூகத்துக்கும் பயனற்ற கதைகளை அளந்து பொழுது போக்க தயவு செய்து இந்த ஊடகத்தின் நேரத்தையும் இடத்தையும் வீணடிக்காதீர்கள்.
    நன்றி
    வன்னிக்குமரன்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ……………..ஊரடங்கு சட்டத்தில் தேர்தல்நடத்தக் கூடாது ஆனால் நடத்தப்படுகிறது. என்ன செய்யமுடியும்? தேர்தலை நடத்துவதா? தேர்தலை நிராகரிப்பதா?? அல்லது ஊரடங்கு சட்டம் நீக்க போராட்டம் நடத்துவதா? எப்படி? எந்த நேரத்தில்?
    இவ்வளவு காலமும் தமிழ்மக்களுக்கு நடந்த அவலத்திற்கு பெரும்பகுதி பொறுப்பை புலிகளே ஏற்கவேண்டும்.. இதேயளவு அவலங்களை இனியும் பிந்திவருகிறவர்களும் ஏற்படுத்துவார்கள் என்றால்……. தேர்தலில் பங்குகொள்பவர்கள் வேட்பாளர்களாக நிற்பவர்கள் புலிகளின் அடாவடிதனத்திற்கு சவால் விட்டு அல்லவா தம்மையும் தமது கட்சிகளையும் பாதுகாத்தார்கள். இதில் தம் உயிரை தியாகம் செய்தவர்கள் ஏராளம். சிறுதும்பெருதுமாக இவர்கள் மக்களுக்கு துணையிருக்கவில்லை என கருதலாமா?

    அவர்கள் அவர்களிகளின் கூட்டுமுயற்சியின் முயற்சியாலேயே தமிழ்மக்களின் வாழ்வை நிர்ணயிக்க முடியும். அப்படியிருக்கையில்.. புலம்பெயர் நாட்டிக்கு உயிரை பாதுகாக்கவும் வசதியானவாழ்வை தேடிக்கொள்ளவும் வந்திருந்துகொண்டு அவர்களை பிந்திவருகிற பேரூந்து பெரும்புலி சின்னப்புலி என்று …………….கருத்துக்கூறகூடாது

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தேசம்நெற் ஆசிரியர் குழு அவர்களுக்கு! உயிர்ரோட்டமுள்ள எனது பின்னோட்டத்தின் சில பகுதிகளை தாங்கள் தணிக்கை செய்து விட்டீர்கள். உங்களுக்கு அது தவறாகத் தெரியலாம். மனித குலத்திற்கு விரோதமாகக் செயல்படும் யாவரும் மனிதஉயிர்களை கொல்லப்படுத்துவதை நியாப்படுத்துபவர்கள் எவர்க்கும் எந்த உதாரணத்தையும் நான் எடுக்கத் தயங்குவதில்லை.

    நீங்கள் செய்த இந்த தணிக்கை என்உறுப்பில் ஒருபகுதியை வெட்டி எடுத்ததாகவே கருதுகிறேன். உங்கள் நிதானமும் பொறுமையும் என்னை பெருமைப்பட நினைக்கும் நேரத்தில் அவிந்து போன ஒருமனிதனுக்கு மகிழ்சியை ஏற்படுத்தாது. அன்றாடம் நடக்கும் சுயநலத்திற்கும் பொதுநலத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் இந்த உவமைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடாது என்பதே என்கருத்து.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    // தமிழரின் எதிர்கால அரசியல் சமூக நிலை நிலைப்பாடுகளை நிலைப்படுத்த என்ன செய்யலாம் என்று நல்லமனதுடன் ஆராய்வோம்’ – வன்னிக்குமரன் //

    இலங்கை மக்களது நிலைபாடுகளை நிலைப்படுத்த என பரந்து சிந்தியுங்கள். செயல்படுங்கள். நிச்சயம் அனைத்து இன மக்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யும். தன் இனம் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் இல்லாமலே போவார்கள்.நல் இணக்கத்தினூடாக நாம் நலமுடன் வாழ வழி தேடுவோம்.

    Reply
  • BC
    BC

    அந்த பாவப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையில் சிறிது முன்னேற்றம் வருவது கூட புலி ஆதரவாளர்களக்கு பிடிக்கவில்லை. தமிழர்கள் முன்னேற்றம் என்பது அவர்கள் பணவருமானத்தின் வீழ்ச்சி.

    Reply