ஏழு மாதங்களாகியும் இதுவரை வேலை நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என நீவூட் தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எந்த தொழிற் கட்சியும் முன்வரவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர். ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீவூட் பெருந்தோட்ட அதிகார சபைக்குரிய தோட்டம் 1989 ஆம் ஆண்டு தனியார் ஒருவருக்கு 30 வருட உப குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இத்தோட்டத்தினை உப குத்தகைக்கு எடுத்த புதிய நிர்வாகம் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டதன் விளைவாக நிர்வாகத்திற்கும் தோட்டத் தொழிலாளிகளுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தன.
103 ஏக்கர் விஸ்திரணம் கொண்ட மேற்படி தோட்டத்தில் பெறுமதியான தேயிலைச் செடிகளை அகற்றி விட்டு கிராண்டிஸ் மரங்களை நடவும் 15 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கறி பயிரிடவும் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் மேற்படி தோட்டத் தொழிலாளிகள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் இதவரை தொடர்வதாகவும் இவ்வேலை நிறுத்தம் குறித்த எந்தவித தொழிற்கட்சிகளும் நிர்வாகத்தோடோ அல்லது தொழிலாளிகளோடோ பேச்சு வார்த்தை நடத்த வில்லை என நிவ்வூட் தோட்டத் தொழிலாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சுமார் 194 தொழிலாளிகள் இத் தோட்டத்தில் பணியாற்றியதாகவும் தற்போது 98 தொழிலாளிகள் மாத்திரமே உள்ளனர் எனவும் தொழிலாளிகள் மேலும் தெரிவித்தனர்.