வெளி நாடுகளில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாட்டிற்கு வருமாறு அழைப்பதற்கும் அவர்கள் வராத பட்சத்தில் அவர்களின் இடங்களுக்கு பொருத்தமானவர்களை நியமிப்பது குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம்,கஜேந்திரன், என்.கே.ராஜலிங்கம் ஆகியோர் நீண்டகாலமாக வெளிநாடுகளில் தங்கி உள்ளனர்.
இவர்களில் சிலருக்கு நாடாளுமன்றத்தில் விடுமுறை பெற்றுக் கொடுப்பதில் இங்கிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். லீவு பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் அவர்களுக்கு விடுமுறை வழங்கக் கூடாது எனவும் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக வெளிநாடுகளில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திய அத்தாட்சிப்பத்திரத்தை கொடுத்து விடுமுறை பெற வேண்டிய நிலைக்கு சக கூட்டணி உறுப்பினர்கள் தள்ளப்பட்டனர். இதனை அடுத்து இவ் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது
பார்த்திபன்
பேசாமல் நீங்கள் மொத்தமாய் இராஜினாமா செய்துவிட்டு, அடுத்தநிலையிலுள்ளவர்களை உங்கள் பதவிகளுக்கு வர விடுவதே தமிழ் மக்களுக்கு இறுதிக் காலத்திலாவது நீங்கள் செய்த நன்மையாக இருக்கும்.
msri
உங்களுக்கு வாக்களித்த மக்கள்> சொந்த பந்த உறவுகளைப் பிரிந்து பஞ்சம பசி பட்டினியுடன் முட்கம்பி வேலிக்குள்! நீங்கள் வெளிநாடுகளில் உல்லாச சுகபோக வாழ்க்கை!
Rompa pala Nedumaaran
ஜயா வணக்கம்,உஙகள் உறுப்பினர்கள் நாட்டில் இருந்து மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியுமா??? உஙகளின் புளுத்துப்போன அரச எதிர்ப்பு அரசியலால் மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்?????அறிக்கை விடுவது மட்டுமே அரசியலாய் இருந்த உஙகள் உறுப்பினர்கள் எஙிகிருந்தால என்ன. வன்னியில் எம்மினம் சாகும் போது கூட எட்டிப்பாக்காத மக்கள் பிரதினிதிகள்….???? என்ன மனிதர்கள் நீஙகள்??? உஙகளை நம்பி இருந்த வன்னி மக்களை முட் கம்பிகளின் பின்னால் எதிர்காலத்திற்காய் ஏஙக விட்டு ஏமாற்றி ஓடியவர்கள் நீஙகள் எந்த முகத்துடன் அந்த அப்பாவி மக்களை மீண்டும் பார்ப்பீர்கள்…..????
romeo
எப்போதோ எடுத்திருக்க வேண்டிய இந்த நல்லமுடிவு ஏன் இவ்வளவு காலம் கடந்து எடுக்கப்படுகின்றது. உடனடியாக இவர்களை பராளுமன்ற அங்கத்துவத்திலிருந்து வெளியேற்றி மக்களுக்கு உண்மையாக உதவக்கூடிய உறுப்பினர்களை தெரிவுசெய்து ஒன்றுபட்ட இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது அரசின் முக்கிய கடமையாகும்.