திறனாய்வாளரும் கவிஞருமான இ. முருகையன் 27 June 2009 காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 75 ஆகும். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக்கொண்ட, கொழும்பில் வசித்துவந்த இவர் திடீரென காலமானார். இறுதிக் கிரியைகள் இன்று காலை 8.30 அளவில் கொழும்பு ஜயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, 3 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் இவரது பூதவுடல் தகனம் செய்யப்படும்.
ஆதிபகவன், அது அவர்கள், நாங்கள் மனிதர், மாடும் கயிறறுக்கும் உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், சிறந்த திறனாய்வு ஆய்வாளராகவும் திகழ்ந்தார்.
வெறியாட்டு, கடூழியம், மேற்பூச்சு, இரு துயரங்கள் போன்ற பா. நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். பேராசிரியர் கைலாசபதி, மகாகவி உருத்திரமூர்த்தி ஆகியோருடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி பல்வேறு ஆக்கங்களை மேற்கொண்டுள்ளார்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவராகப் பணியாற்றிய இவர், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளராக இருந்த இவருக்கு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கிக் கெளரவித்திருந்தது.
(படம் – தமயந்தி)
S Murugaiah
ஈழத்தமிழரின் ஒரு காத்திரமான இந்த நூற்றாண்டு கவிஞனாகமட்டுமில்லாமல் தனது திடமான இலக்கியப் படைப்புக்களை தமிழர்க்குத் தந்த ஒரு சமூகசீர்திருத்தப் போராளியை தமிழராகிய நாம் இழக்க நேரிட்டது எம் துர்ப்பாக்கியமே.
யாழ்-பல்கலைக்கழகத்தில் அவர் உதவிப் பதிவாளராக இருந்த போது நான் அங்கு கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது ம்ட்டுமல்ல முருகையன் அவர்களின் நெருங்கிய நட்பும் கிடைத்தது. பல்கலைக்கழக காலத்தில் பல சீர்திருத்த சமூக அக்கறையான கருத்துடன் நான் பல கவிதைகள் எழுத வழிகாட்டியாய் இருந்த அந்த அற்புத கவிஞனின் > ஓர் தெளிந்த தமிழ் அறிவாளியின் இழப்பு ஈழத்து தமிழ் இலக்கியத்துக்கு ஓர் பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.
அவரின் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனை வேண்டுவதுடன் தேசம் நெற் ஊடாக அவரது குடும்பத்தாருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
அடக்கம் அமைதி
ஆர்ப்பாட்டம் இல்லா
உன் தோற்றம் –
ஆனால் உன்
அடிமனதில் இருந்து வந்த
ஆழுமைக் கருத்துக்களோ
அணுஆயுதமாய் அடைந்ததையா
தமிழுலகை
நீர்க்குமிழி வாழ்க்கை என்றாய்
நினைத்ததை கணத்தினிலே
நிதானமாக கூறு என்றாய்
இலக்கிய வினோதம் தன்னை
எமக்காக தந்தவனே
உன் ஊனுடல் தான் மறைந்தாலும்
இந்த
தமிழுலகம் உள்ளவரை
உன் ஞானவுடல் அழியாது.
அன்புடன்
ச முருகையா
இலண்டன்
நண்பன்
அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.
எமது கலைஞர்கள் முகம் தெரியாமலே உதித்து மறைந்து போகின்றனர். அவர்கள் குறித்து இப்படியாவது தெரிய வந்ததே.
tholkapion
kalvajal has many writers murugaijan is one of them, i knew him from all srilanka kamban society.as a person he is wonderful and another one the great poet puthuvai ratnathurai he made so many sitbam to kampan kazagam.am wndering where is he?can you please find him for us?
msri
முறபோக்கு இலக்கியத்திற்கு ஊடாகவும்> பேராசிரியர் கைலாசபதியின் அரவணைப்பில் இருந்து இலக்கியம் படைத்த பலர் இன்று நம்மிடையே இல்லை! அவ்வரிசையில் முருகையன் அவர்களும் முக்கியமானவர்! கடந்த 50-வருடங்களுக்கு மேலாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் அவலத்தை>போராட்டங்களை> கலை இலக்கியத்திற்கூடாக பல வடிவங்களில் வெளிக்கொணர்ந்தவர்! அத்துடன் பல்துறை சார்ந்த சிந்தனையாளனும் கூட! அவரின்மறைவு>முற்போக்கு புரட்சிகர இலக்கியத்திற்கு ஓர் பேரிழப்பாகும்! அவர் மறைவால் துயருறும் அனைவருடன்> நானும் அஞசலியையும் துயரையும் பகிர்ந்து கொள்கின்றேன்!
Mrs Valliammai Subramaniam
மூத்த கவிஞன் முருகையன்.
——————-
முருகையன் ஈழ்த்தின் முதன்மைக் கவிஞர்களுள்
அருமைச் சீராடல் அனைத்திற்கும் அமைந்தவரே!
பெருமைப் படுமளவு பாட்டாளி வர்க்கத்தின்
உரிமைக்காய்க் குரல்கொடுக்கும் தாயகத்தின் வாயிலாக
ஒருமைப்பட்ட இதயத்துடன் ஒத்துழைப்பும் வழங்கி
சரியான பார்வையுடன் சரித்திரக் கவிதைகள்…
வரிசையில் முற்போக்கு வதனத்தில் ஓரமைதி
பரிபாலன சேவையாம் பல்கலைக் கழகப்பதிவாளர்
தெரிவுசெய்த மார்க்கமது முற்போக்குச் சிந்தனைகள்..
பெரியோன் இவரென்று எல்லோரும் போற்றுவரே!
* * *
அல்லும் பகலும் தேசியகலை இலக்கியச்
சொல்லும் செயலும் சுடரான சிந்தனையும்
வல்லவராம் இருமொழியில் தாய்மொழிக்குத் தனியிடமாம்
எல்லையில்லாத கவிதைகள் ஆயிரம் ஆயிரம்
நல்ல கருத்துடன் நயம்பட வடித்தகவி
அத்தனையும் மானிடத்தின் அரிய விடியலுக்கு
சத்தமில்லா எதிர்கால விழிப்புணர்வுச் சூரியனாய்
திங்களென்ற குயிலித் திருமகளும் மங்காத்
தங்கமகன் கண்ணன் மாநிலத்தில் கண்மணிகள்…
முல்லைச் சிரிப்பும் முறுவலித்த முகமுமாய்..
இல்லையே இவனென்று நினைக்க முடியவில்லை!
* * *
மானிடன் அழிவதுண்டு மானிடம் அழிவதில்லை
நானிலத்தே வாழுகையில் நலிந்தோர்க்குக் குரல்கொடுத்து
இறுதிமூச்சு இருக்கும்வரை என்னிதயக் கருத்துக்களை
அறுதியாக உரைபேனென அரும்பெரும் கவிதைகளில்
வடித்து வைத்துச் சென்றதெல்லாம் மக்களின்
துடிப்பை வெளிக்காட்டும் துல்லியப் பளிங்குபோல
அடியொற்றி வாழ்வோரின் அடிமனதில் ஒளிவிடும்
விடிவெள்ளி ஆனவருள் முருகையன் முதற்கவிஞன்.
——————
திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம். சிங்கப்பூர்