ஏழாவது ஆசிய பெண்கள் வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி சம்பியனாக தெரிவாகியுள்ளது. இலங்கை பெண்கள் வலைப்பந்தாட்ட அணிக்கும் நடப்புச் சம்பியனான சிங்கப்பூர் அணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற மேற்படி போட்டியில் இலங்கை அணி 77-48 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் அணியை தோற்கடித்தது.
ஆசிய வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 9 நாடுகள் பங்கேற்றன. இலங்கை அணி தான் பங்கேற்ற 6 போட்டிகளிலும் வெற்றியீட்டி 4 ஆவது தடவையாகவும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
இலங்கை அணி முதல் சுற்றை 19-11 என்ற செட் கணக்கிலும் இரண்டாம் சுற்றை 20-14 என்ற செட் கணக்கிலும் முன்றாம் நான்காம் செட்களை 18-9, 20-14 என்ற செட் கணக்கிலும் வென்றது.