இலங் கையின் கிழக்கே சில வருடங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து தன்னுடன் வந்தவர்களில் சுமார் 900 பேர் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிக்கின்றார்.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் 600 பேர் இராணுவத்தில் ஏற்கனவே சேர்ந்துள்ளதாகவும் 300 பேர். இராணுவத்துடன் தற்போது உள்ள போதிலும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டு விடுவார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், சாதாரண சிப்பாய் தரத்திலேயே இவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் சிலர் அதிகாரிகளாக நியமனம் பெறும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ் படைப் பிரிவொன்றை உருவாக்கவது பற்றி இராணுவத் தளபதிக்கு நோக்கம் ஒன்று இருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் குறிப்பிட்டார். இதே வேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த ஒரு சிலரே அரச படையுடன் இணைய விரும்பியதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார்