கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணி இன்று முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பங்குபற்றுகிறது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அணியுடனான இப்பயிற்சி ஆட்டம் கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. திலிண கன்டம்பி தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிறுவன அணி இன்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

அண்மையில் நடந்து முடிந்த ருவன்டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியனான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று முன்தினம் இலங்கை வந்துசேர்ந்தனர். ருவன்டி-20 சம்பியன் கிண்ணத்தை பாகிஸ்தான் வெல்வதற்குக் காரணமாகவிருந்த சகலதுறை ஆட்டக்காரர் ஷஹீத் அப்ரிடி இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை.
இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளும் ஒரு ருவன்டி-20 போட்டியும் இடம்பெறவுள்ளன. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.