என் குழந்தைகளின் தந்தை ஜாக்சன் அல்ல- டெபோரா ரோ

29-de-borah-michel.jpgமைக்கேல் ஜாக்சனுக்கும், எனக்கும் இடையே பிறந்ததாக கருதப்படும் எனது இரு குழந்தைகளுக்கும் உண்மையான தந்த மைக்கேல் ஜாக்சன் அல்ல. செயற்கை முறையில் கருத்தரித்தே இந்தக் குழந்தைகளை நான் பெற்றேன் என்று கூறியுள்ளார் ஜாக்சனின் 2வது மனைவியான டெபோரா ரோ. டெபோரா ஒரு நர்ஸ் ஆவார். மைக்கேல் ஜாக்சனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது அவரைக் கவனித்துக் கொள்வதற்காக வந்தவர். ஜாக்சன், டெபோரா மீது காதல் கொண்டு அவரை மணந்து கொண்டார்.

இந்தத் தம்பதிக்கு பாரீஸ் மற்றும் பிரின்ஸ் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்தக் குழந்தைகள் இருவரும் ஜாக்சன் வசமே இருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஜாக்சன் தந்தை அல்ல. செயற்கை முறையில் கருத்தரித்தே இவர்களைப் பெற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் டெபோரா. இதுகுறித்து டெபோரா அளித்துள்ள பேட்டியில், இரு குழந்தைகளையும் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து பெறப்பட்ட விந்தனுவைக் கொண்டு செயற்கை முறையில் கருத்தரித்தே நான் பெற்றேன்.

இருவருக்கும் தந்தை மைக்கேல் இல்லாவிட்டாலும் கூட நான்தான் தாய். எனவே இருவரையும் நானே வளர்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் டெபோரா.

பாடப்படாத 200 பாடல்கள்..

இதற்கிடையே, மைக்கேல் ஜாக்சன் தானே எழுதி, இசையமைத்த 200 பாடல்களை வைத்து விட்டுச் சென்றுள்ளாராம். இவை ஒருமுறை கூட பாடப்படாதவை. இவை தனக்குப் பின்னால் தனது குழந்தைகளுக்காக இருக்கட்டும் என கூறி வந்தாராம் ஜாக்சன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *