ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி மீண்டும் இன்று காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர், 19ஆவது தடவையாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த யசூசி, இலங்கை அரசாங்கம் சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தியதுடன், வவுனியா அகதி முகாம்களின் நிலை குறித்தும் தமது கவலையை வெளியிட்டிருந்தார்.