வவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.
இதில் தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
வேட்பாளர்களுக்கு அவர்களின் இலக்கம் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்டதும் இந்த கருத்தரங்குகள் நடைபெறும் எனவும் தேர்தல் பிரசாரத்துக்கு பொறுப்பான வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பதுடன் வவுனியா நகர சபையின் பல பகுதிகளிலும் பிரசாரங்களில் இவர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதன் முக்கிய கருத்தரங்கு அடுத்தவாரம் வவுனியாவில் நடைபெறவுள்ளது. இதேவேளை, வவுனியா பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஏனைய தமிழ்க்கட்சிகளும் பிரசார வேலைகளை ஆரம்பித்துள்ளன.