புலம் பெயர் தமிழர்களின் உதவிப் பொருட்களை ஏற்றி வந்த ”கப்டன் அலி” என்னும் கப்பலில் உள்ள பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உடன்பட்டதை அடுத்து, அதனைப் பெற்று இலங்கைக்கு அனுப்பும் பணிகளில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வெளியுறவு அமைச்சு கேட்டதற்கிணங்க, இந்த விடயம் தொடர்பாக தாம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தை தொடர்பு கொண்டதாகவும், அந்த பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த பொருட்களை தாம் பெற்று இலங்கைக்கு வேறு கப்பலில் அனுப்ப நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்திய செஞ்சிலுவைச் சங்க அதிகாரி கூறியுள்ளார்.
அதற்கான நடவடிக்கைகளை சென்னையில் உள்ள தமது அலுவலகம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.