‘இளைஞர் களுக்கு நாளை’ அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ, வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்து புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் இருக்கும் சரணடைந்துள்ள புலி உறுப்பினர்களை நேரில் சந்திதது உரையாடினார். படையினரிடம் சரணடைந்த 663 புலி உறுப்பினர்கள் பூந்தோட்டம் நிவாரணக் கிராமத்தில் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
புலிகள் அமைப்பில் தலைமைப் பதவி வகித்தவர்களும் இந்நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு விசேட புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் செயற்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் தங்கியிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்களது பொழுதுபோக்கிற்காக ‘இளைஞர்களுக்கு நாளை’ அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை அன்பளிப்பாக வழங்கினார்.
புலிகள் அமைப்பின் காவல்துறையில் பணியாற்றிய அ. அஜந்தன், பயங்கரவாதத்தால் நாட்டுக்கு நல்லது எதுவும் நடைபெறவில்லை. தமிழர்களின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. ஜனாதிபதிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க நாம் தயார். இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஆயுதத்தை கையில் எடுக்க மாட்டோம் என்றும் கூறினார்.