இரத்தின புரியின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக களுகங்கை உட்பட பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பாளர் கேணல் பிரியங்கர தெரிவித்தார்.
தற்போது 17 அடி 8 அங்குலத்தில் காணப்படும் களு கங்கை ஆற்றின் நீர் மட்டம் 19 அடிக்கு மேல் உயருமாயின் இரத்தினபுரி பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அங்கு உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட செயலகம்,பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ குழு மற்றும் தொண்டு நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது