தேர்தல் பிரசாரங்களின்போது, இராணுவ வெற்றிகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சுவரொட்டிகள், பதாதைகள் அல்லது ஊடகங்களில் எந்தவொரு வேட்பாளரும் இராணுவத்தினரின் பிரதிமைகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள் தேர்தல் பிரசாரங்களில் இத்தகைய படங்களை பயன்படுத்த விரும்பினால் அதற்காக அவர்கள் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து எழுத்துமூலமான அனுமதியைப் பெற்றிருக்கவேண்டுமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.