நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலையத்தில் அடை மழை பெய்த வருவதால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. எலபாத்த, கஹவத்தை, மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அடுத்த 24 மணி நேரத்துக்குள் அடை மழை பெய்தால் நாட்டில் பல பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.