மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலை காணப்படுகிறதென இடர்முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
13வது திருத்தம் அமுல்படுத்தவேண்டும் என்பதில் இணக்கப்பாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய அமைச்சர், எனினும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலொன்று காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
அந்த வகையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலையிருப்பதுடன், இலங்கை போன்ற சிறிய நாட்டில் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழேயே இருக்கவேண்டுமென்ற கருத்தியலொன்று நிலவுவதாகவும் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.
msri
அப்ப என்னதான் அதிகாரங்கள்> மலசலகூடம் கட்டுகினற> றோட்டுப் போடுகின்ற>குப்பை அள்ளுகின்ற> தெருவில் செத்த ஆடு+மாடுகளை பொறுக்கி அடக்கம் செய்கின்ற அதிகாரங்களோ> உந்த 13-வதுக்குள் வரப்போகின்றது!
rohan
அந்தக் காலத்து கிராம நகர சபைகளுக்கும் மாகாண சபைகளுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா மந்திரியாரே?