“பிரபா கரனின் பிரிவினைவாத பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஆட்டிலறி தாக்குதல்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. இவ்வாறான சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எவ்விதமான அச்சமும் இன்றி தேர்தல்களில் போட்டியிடுகிறது. கழுத்துக்குக் கத்தியை வைத்து ஜனாதிபதி மஹிந்தவுக்கு நாம் சூழ்ச்சி செய்யவில்லை” என்று ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
‘நாட்டை வெற்றி கொண்டு கிராமத்தைப் பாதுகாப்போம்’எனும் தொனிப்பொருளில் மகாவலி மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கை தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அக்கட்சியின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது:br>
“தமிழ்க் கட்சிகளால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைவாதம் பயங்கரவாதமாக உருவெடுத்தது. இதனால் ஜனநாயகம் உருவாவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில் கிழக்கில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வடக்கிலும் ஜனநாயகம் ஏற்படுத்தப்படல் வேண்டும்.
கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னர் அது இராணுவமயப்படுத்தப்படும் என்றனர். எனினும் அவ்வானதொரு நிலைமை அங்கு ஏற்படவில்லை. வடக்கிலும் ஏற்படாது. பிரபாகரனின் ஆட்டிலறிகளால் நிறுத்தப்பட்ட ஜனநாயகம் இன்று வடக்கில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பமாகும்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். கழுத்துக்குக் கத்தியை வைத்து ஜனாதிபதிக்கு நாம் சூழ்ச்சி செய்யவில்லை என்பதனால் இதுதொடர்பில் வெளிப்படையாக விவாதங்களை நடத்தி ஏற்பதா? இல்லையா? என்ற முடிவுக்கு வரலாம்.
சூழ்ச்சிகள் மூலம் தீர்வு காணமுடியாது அவ்வாறான நிலைமை ஹெலஉறுமயவுக்கு தேவையில்லை என்பதுடன் கட்சி அதன் கொள்கையில் உறுதியுடன் இருக்கின்றது. சர்வக்கட்சி ஆலோசனை குழுவில் வடக்கை சேர்ந்த உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு பகிரங்க விவாதங்களை நடத்தவேண்டும்.
நண்பன்
இப்படியாவது நீங்கள் இறங்கி வர வேண்டும்.
“மதிலும் பசையும் இருந்தால் நினைத்ததை எழுதி ஒட்டுவோர் வாய்களை அதே பசையினாலேயே ஒட்டுவோம்” என மகிந்தவின் முக்கிய அமைச்சர் ஒருவர் உங்களைப் பார்த்து சும்மா சொல்லவில்லை?