விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்: செ. பத்மநாதன் கோரிக்கை

lttepathmnathan.jpgஇந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன். அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என புலிகள் அமைப்பின் சர்வதேசப் பிரிவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கோரியுள்ளார்.

இது குறித்து ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவியதால்தான் விடுதலைப் புலிகள் தோல்வி அடைய நேரிட்டது என்று கூறியுள்ளார் சமீபத்திய போரில், இந்தியா, இலங்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. முழு வகையில் உதவிகளைப் புரிந்தது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு நாங்களும், தமிழ் மக்களும் பலிக்கடாவாகி விட்டோம். இலங்கையின் இராணுவ வெற்றிக்கு இந்தியா எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது எங்களுக்கு முழுமையாக தெரிந்தாலும் கூட, இந்தியாவை நாங்கள் வெறுக்கவில்லை.

இந்தியாவின் பிரதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். குறிப்பாக சீனாவை கருத்தில் கொண்டால் நிச்சயம் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுப் பாதுகாப்பாக இருக்க முடியும். இதை இந்தியா ஒரு நாள் உணரும், ஈழத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க முன்வரும்.

இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன்.அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றார் அவர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • மகுடி
    மகுடி

    //இந்தியாவின் பிரதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். குறிப்பாக சீனாவை கருத்தில் கொண்டால் நிச்சயம் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுப் பாதுகாப்பாக இருக்க முடியும்.//

    உங்களை நம்பிய தமிழ் மக்களது பாதுகாப்பு உலகம் அறிந்தது. அதே நிலைதான் இந்தியாவுக்குமா?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன் .அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றார் அவர்/–மிஸ்ரர் பத்மநாதன்!, உங்களின் இந்த நிலைப்பாட்டை நாம் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்!. உங்களை மன்னிப்பதற்கு இந்தியா தயாராக இருந்தால்,ஏன் பிரபாகரனை இந்தியா மன்னித்திருக்கக் கூடாது!?- லாஜிக் எங்கோ இடிக்கிறதே!?.

    /இந்தியாவின் பிரதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். குறிப்பாக சீனாவை கருத்தில் கொண்டால் நிச்சயம் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுப் பாதுகாப்பாக இருக்க முடியும். இதை இந்தியா ஒரு நாள் உணரும், ஈழத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க முன்வரும்./–

    நான் பலமுறை எழுதிவிட்டேன், சீனா, கீனா என்று லார்ட் லபுகுதாஸ் போன்று பேசவேண்டாமென்று!. பாகிஸ்தானை சீனா ஆதரித்தது 1962 இந்திய சீன போருக்குப் பிறகுதான். அமெரிக்கா சீனாவை ஆதரிக்கத் துவங்கியது “நிக்ஸன்” காலத்திலேலேயே துவங்கி விட்டது!. இந்திய மற்றும் பாகிஸ்தான் நிர்வாக உயர் மட்டத்தில், சில சுயநலக் கூட்டங்கள் அமர்ந்திருக்கின்றன, அவர்கள் புளங்காகிதம் அடைவது உம்மைப் போன்ற லபுகுதாஸ்களால்தான். சீனாவுக்கு எதிராக இந்தியா போகுமென்றா உம்முடைய பிரச்சனை (இலங்கைத் தமிழர்)துவங்கியது?, உம்முடைய பிரச்சனை என்னவென்று கூறுங்கள்!. கலைஞர் கருணாநிதி தன்னுடைய பிழைப்பு நடக்க எல்லாவற்றிற்கும் ஒத்து ஊதுவார், அவருடைய திராவிட “டமாரத்தினால்தான்” இந்த நிர்வாககாரர்கள் புளங்காகிதம் அடைந்துள்ளனர்!. நிலமையை ஏளனமாகக் கொண்டுவந்துவிட்டு, “முள்ளின் மீது சேலையை போட்டு இருக்கிறீர்கள்”. நமக்கு தெரிந்ததெல்லாம், “வெள்ளைக்காரர்கள்” சக்தி மிகுந்தவர்கள், புத்திசாலிகள் என்பதுதான்!. அமெரிக்காவையே பல பத்தாண்டுகளாக “பார்டிசான் போரில்” சிக்க வைத்துள்ளனர் பாக்கிஸ்தானின் இந்த உயர் நிர்வாகத்தினர்!. இதில் உஷாராயிருப்பது “ஐரோப்பிய யூனியன்” என்றும், அது சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறது, அது இந்திய நிர்வாகத்தை ஆட்டுகிறது, அது உங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று உங்கள் அரசியல் ஆய்வாளர்கள் கருதுவார்களேயானால், மீண்டும் நீங்கள் ஆகாயக் கோட்டைக்குள் கால் வைக்கிறீர்கள் என்று அர்த்தம்!.

    Reply
  • palli
    palli

    அண்ணா நீங்கள் நம்பியாருடன் தொடர்பு வைத்திருப்பதால் அது இந்திய தொடர்பு ஆகிவிடாது; ஏற்க்கனவே பல ஆண்டுகாலம் இந்தியா எமக்கு ஏதாவது தரும் என இருவர் இந்தியாவிலேயே முகாம் இட்டு காவல் இருக்கினம்; அதுக்கே எந்தவிடிவும் இல்லை; அதுசரி புலி தடையை எடுக்க சொல்லி தாங்கள் அறிக்கை விட்டது சரி; ஆனால் அதுக்கு முன் உங்களது தனிபட்ட பிடி விறாந்தை நீக்கும்படி கேளூங்கள்; அதுவே சாத்தியம் இல்லை, மக்கல் ஜக்ச்சன்னுக்கு அடுத்தாபோல் முகமாற்றத்துக்காக செலவு செய்த பெருமை தங்களையே சாரும், அகபட்டால் பளய முகத்தை எடுக்க என்ன என்ன சிகிச்சை எல்லாம் எடுப்பார்களோ, அத்துடன் உங்கள் அணி(வியாபார)பிரபாகரனே துரோகி அவரால்தான் புலிஅமைப்பு சீரளிந்து விட்டது என தும்முவது பரவலாக ஆரம்பம்;இது எங்கு போய் முடியுமோ,?

    Reply
  • xavier
    xavier

    rain stop but stil dizzing in camps there are posters in idp camps saying leader is not dead we all need to thank mahinda brs for lebrete from ltte leaders

    Reply