சிட்னியில் இரு இலங்கை மணவர்கள் அசிட் வீச்சுக்கு உட்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 17 ஆம் திகதி, நள்ளிரவு வேளை, வெஸ்ட்மீட், அலெக்ஸ்சான்ரா அவனியூவிலுள்ள தமது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த சமயம் ஜெயஸ்ரீ வடவல(வயது22), சதுக்க வீரசிங்க (வயது 27) ஆகியோர் மீது அசிட் வீசப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்