புனித மடுத்தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அப்பிரதேசத்தில் உள்ள மிதிவெடிகளை அகற்றுவதற்கான வேலைகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 33 வருட காலத்தின் பின்னர் எதுவித அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமான முறையில் மடு தேவாலய உற்சவத்தை கொண்டாட வழியேற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கத்தோலிக்க மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி கொடியேற்றம் நடைபெற்று 15 ஆம் திகதி வருடாந்த உற்சவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உற்சவத்தில் இம்முறை நான்கு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஒன்றுகூடுவர் என எதிர்பார்ககப்படுகின்றது.
இவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உட்பட அனைத்து வசதிகளையும் வழங்க உரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேவாலய நிருவாகப் பொறுப்பாளர் வண. பிதா டெஸ்மன்குலஸ் தெரிவித்துள்ளார்
பார்த்திபன்
//கடந்த 33 வருட காலத்தின் பின்னர் எதுவித அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமான முறையில் மடு தேவாலய உற்சவத்தை கொண்டாட வழியேற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கத்தோலிக்க மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். //
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனைக் கடிப்பது போல், பிரபாகபரன் தன் சுயநலத்திற்காக மாதாவையும் பீடத்திலிருந்து அகற்றினார். தெய்வக் குற்றம் சும்மா விடாது என்பது போல் பிரபாகரனின் நிலையும் ஆனது. இன்று மடுமாதாவின் உற்சவம் 33 வருடங்களின் பின் சகசமாகக் கொண்டாட முடிகின்றதென்ற மக்களின் ஆதங்கமாவது, இன்றும் தமிழீழக் கனவில் மிதக்கும் சிலருக்கு தெளிவை ஏற்படுத்துமென நம்புகின்றேன்.
romeo
1983 ம் ஆண்டு வரை மடுமாதா கோவில் நிர்வாகம் யாழ்மேலாதிக்கத்தின் கையில் சிக்கியிருந்தது. இதற்கு முக்கிய காரணம் இக்கோயிலில் கிட்டிய கொழுத்த உண்டியல் வருமானம்தான். சாக்குகளில் கட்டப்படும் பணம் யாழ்மேற்றிராசனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்பு அப்பணத்திற்கு என்ன கணக்கு என்பது எவருக்குமே தெரியாத, புரியாத புதிராகவே இருந்து வந்தது. 1983 ஜூலை கலவரத்தின் பின்பு சிங்கள மக்களின் மடுயாத்திரையில் மந்தநிலை ஏற்பட்டதால் உண்டியல் வருமானம் அடியோடு குறைந்து விட்டதாலும், யாழ்மேலாதிக்கம் மடுக்கோவிலை மன்னார் மக்களிடமே கையளித்துவிட்டது. தற்போது சிங்கள மக்கள் மீண்டும் வரத்தொடங்கி உண்டியல் கொழுத்தால், தேன் பானைக்குள் கைவிட்டவன் விரலை நக்காமலிருப்பானா. யாழ்கத்தோலிக்க மேலாதிக்கம் மீண்டும் மடுவை பாவிக்க நினைத்தால் அதை மன்னார் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது உண்மை.