பயங்கர வாதத்திலிருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கையில் முடிவு காணப்பட்டது போன்று அரசியல் நடவடிக்கைகள் மூலமும் நாட்டுக்கு ஏற்ற தீர்வு ஒன்று காணப்படும் என்று ஆளும் கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்ததாக ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளினதும் பாராட்டுக்கும் இலக்கானது. மஹிந்த சிந்தனையின் கீழ் நாட்டுக்கு ஏற்ற ஒரு பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயல்படுவதாகவும் இதன்போது பல வேறுபட்ட கருத்துக்களும் முன்வைக்கப்படலாம்.
அனுபவம் மிக் ஒரு அரசியல்வாதி என்ற வகையில்; எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முன் எந்த ஒரு ஆழத்தத்துக்கும் அடிபணியாத நிலைப்பாட்டில் ஜனாதிபதி செயல்பட்டு வருகின்றார். விவசாயத்துறையில் இரண்டு இலட்சத்து மூவாயிரம் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ள விடயத்தை அறியாத நிலையில் இது வரை 192000 தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவிக்கின்றார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்