வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள க.பொ.த. (உயர்தரம்) மாணவர்களும், 5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வசதியாக ஏழு வலையங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப் படவுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தலைமை யிலான உயர்மட்டக் குழுவொன்று நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்து மாணவர்களின் நிலை தொடர்பாக ஆராய்ந்த பின்னரே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
க.பொ.த. (உ/த) பரீட்சை ஓகஸ்ட் 11ம் திகதி ஆரம்ப மாகவுள்ளது. இதற்கென நிவாரணக் கிராமங்களிலிருந்து 856 மாணவர்கள் தோற்றவுள்ளனர். அதேநேரம் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 23ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தப் பரீட்சைக்கு நிவாரணக் கிராமங்களிலிருந்து சுமார் 6000 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இவர்களது வசதி கருதி அவரவர் தங்கியுள்ள நிவா ரணக் கிராமங்களிலேயே பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
கதிர்காமர் நிவாரணக் கிராமம், குமாரசுவாமி நிவாரணக் கிராமம், அருணாச்சலம் நிவாரணக் கிராமங்கள் உட்பட சகல நிவாரணக் கிராமங்களும் அடங்கலாக பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
விசேட அடையாள அட்டை
இதேவேளை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி அடையாள அட்டை வழங்குவதற்கு பரீட்சைத் திணை க்களம் ஏற்பாடு செய்துள்ளது. புகைப்படப் பிடிப்பாள ரைத் பிரத்தியேகமாக அனுப்பி படங்கள் எடுத்து மாணவர் அடையாள அட்டைகளை வழங்குவதற்கும் பரீட்சைத் திணை க்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரீட்சைகளுக்கான அதிகாரிகள் மதவாச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்படுவார்கள். நிவாரணக் கிராமங்களிலுள்ள ஆசிரியர்கள் மேற் பார்வையாளர்களாகப் பணியாற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்கள உயர் மட்டக்குழுவில் ஆணையாளருடன், கல்வி வெளியீட்டு திணைக்களப் பணிப்பாளர் புஸ்பகுமார உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்