இலங் கையின் கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்காக முன்னாள் இலங்கை அணி வீரரான அரவிந்த டி சில்வா நாடளாவிய ரீதியில் விசேட திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார்.
அதன்படி பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டின் நுட்பங்களை தெளிவாகப் பயிற்றுவித்து நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் அரவிந்த டி சில்வா நிறுவனம் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவு செய்ப்பட்டு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.
யாழ். குடாநாட்டில் கிரிக்கெட் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் முதலாவது குழு இதுவாகும். படத்தில் ஜனாதிபதியுடன் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் வண. என். ஜேம்சன் ஞானபொன்ராஜா, இளைஞர்களுக்கு நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ, யாழ். மாவட்டத்துக்கான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர். வி. கெ. சண்முகலிங்கம், கொக்கா கோலா வதிவிட முகாமையாளர் மானிஷ் சத்துர்டி, அரவிந்த டி சில்வா மன்றத்தின் ஸ்தாபகர் அரவிந்த டி சில்வா தேசிய பயிற்றுவிப்பாளர் ஸ்டேன்மோர் நெல், ஒகில்வி எக்ஷனின் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்தியா சல்கொட ஆகியோரும் காணப்படுகின்றனர்