வணங்கா மண் கப்பல் சென்னைக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் புலம் பெயர்ந்த தமிழர்கள் நிவாரணப் பொருட்களைத் திரட்டி வணங்கா மண் கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்தக் கப்பலை கைப்பற்றி தீவிர சோதனை செய்த இலங்கை அரசு அதில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என உறுதி செய்தது. ஆனால் அதில் உள்ள நிவாரணப் பொருட்களை ஏற்க மறுத்து வெளியேற்றியது. அதனையடுத்துக் கப்பல் சென்னை கடற்பகுதிக்கு வெளியே முகாமிட்டிருந்தது. இந்நிலையில் இன்று வணக்காமண் கப்பலை உள்ளே வர சென்னை துறைமுகம் அனுமதி அளித்துள்ளது.