2008 – 2009ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கென 20,270 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்தார்.
இவ்வாண்டுக்கான வெட்டுப் புள்ளிக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 620 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2008 – 2009 ஆம் கல்வி ஆண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில் :-
பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்தபட்ச தகமைகளை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 236 (1,30,236) பேர் பெற்றிருந்தனர். இவர்களில் 46 ஆயிரத்து 010 (46,010) பேர் விண்ணப்பித் திருந்தனர். இவற்றில் 20 ஆயிரத்து 270 பேர் அனுமதி க்கப்படவுள்ளனர்.
19,340 பேர் வழமையான அனுமதி நடைமுறைக்கமையவும், மிகுதியுள்ள 930 மாணவர்கள் விசேட நடைமுறைக்கமையவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவம், கலை, பொறியி யல் உட்பட 86 வகையான பாடநெறிகளுக்கே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 3724 மாணவர்கள் கலைத் துறைக்கும், 3139 மாணவர்கள் முகாமைத்துவ துறைக்கும், 1718 மாணவர்கள் பெளதீக விஞ்ஞான துறைக்கும், 1196 மாணவர்கள் பொறியியல் துறைக்கும், 1140 மாணவர்கள் மருத்துவ துறைக்கும் மற்றும் 1110 மாணவர்கள் உயிரியல் விஞ்ஞானத் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு 86 பாடநெறிகளுக்கு 19,340 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, 2008 – 2009 கல்வி ஆண்டிற்கென ஐந்து புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருக விஞ்ஞானம் மற்றும் மீன்பிடி (Animal Science & Fisheries), ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் நீரியல் வள தொழில் நுட்பம் (Aquatic Resources Technology and Value Addition), தெங்கு மற்றும் அதனுடைய லேடெக் தொழில் நுட்பம் (Palm and Latex Technology and Value Addition), உபசரிப்பு, சுற்றுலா மற்றும் நிகழ்ச்சி முகாமைத்துவம் (Hospitality, Tourism and Events Management) வயம்ப பல்கலைக்கழகத்தில் உணவு தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப முகாமைத்துவம் (Food Production and Technology Management) ஆகிய பாடநெறிகளே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பாடநெறிகள் ஒவ்வொன்றுக்கும் ஆரம்ப கட்டமாக 50 மாணவர்கள் வீதம் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனரென்றும் அமைச்சர் விஸ்வவர்ணபால மேலும் தெரிவித்தார்.
thevi
வட – சிழக்கு மாணவர்கள் பற்றியும் பிரதேசங்களின் வெட்டுப் புள்ளிகள் பற்றியும் போடாமல் இது என்ன செய்தி? ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்?
S Murugaiah
வெட்டும் புள்ளிகளை துறைசார்பாக பிரசுரிப்துடன் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகளை முடியுமானால் பிரசுரித்தால் எதிர்கால ஆய்வுகளுக்கு பயன்பாடு உடையதாக இருக்கும் என்பது என் அன்பான வேண்டுகோள்.
நன்றி
ச முருகையா