இவ் வருடத்துக்கான தேசிய சாகித்திய விழாவை பொலன்நறுவை, ரோயல் கல்லூரியில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கான பிரேரணையை கலாசார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன சமர்ப்பித்திருந்தார்.
இந்த விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம் திகதி முடிவடையவுள்ளது. இந்த விழாவுடன் தொடர்புள்ள சகல அமைச்சுக்களின் ஒத்துழைப்புக்களும் இதற்குப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.