இலங்கைக்கு 1.9 பில்லியன் டாலர்கள் கடன் வழங்குவது குறித்து, தமது நிறைவேற்று அதிகாரிகள் சபைதான் முடிவுசெய்ய வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.
இலங்கையின் இந்த கடனுக்கான விண்ணப்பம் குறித்து முடிவு செய்வதற்கான கூட்டத்துக்கான திகதியை சபை இன்னமும் நிர்ணயிக்கவில்லை என்று நாணய நிதியத்தின் சார்பில் பேசவல்ல, கரோலின் அட்கின்ஸன் தெரிவித்துள்ளார்.
ஆனால், அது பற்றிய கலந்துரையாடல்கள் தொடர்வதாக அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டங்களை, இலங்கை கையாண்ட விதம் குறித்து அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய நாடுகளால் விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, இந்தக் கடனுக்கான இலங்கையின் கோரிக்கை மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
aappu
இலங்கை அரசு சர்வதேச நாணயநிதியத்திடம் 1.9 பில்லியன் கடன் கேட்பது, இன்று இந்நாட்டில் உயிரோடு வாழும் மக்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காகன அபிவிருத்தி தேவைகளுக்காகவேயன்றி போரில் மாண்டுபோன மக்களுக்கு கல்லறைகள் கட்டுவதற்காகவல்ல என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சர்வதேச நாணய நிதிய நாடுகள் சில,முன்பு புலிகளுக்கு நிதி வழங்கி அதனால் எத்தனையோ உயிர்களை பலியெடுத்ததை மறந்து விட்டனவா? நொண்டிக்குதிரைக்கு சறுக்கியது சாட்டாகிய கதைதான் இது இறந்துபோன மக்களைச்சாட்டி கடனை இழுத்தடிப்பது நியாயமற்ற செயல்.
msri
இந்திய-சீனக் கூட்டாகளின் துணையோடு> பேரினவாதத் திமிர் கொண்டு> மேற்குலகு>அமெரிக்காவையும் அதன் உதவி-தொண்டர் நிறுவனங்களையும் புறம்தள்ளி ஒதுக்கும்போது> அவர்களும் இதுபோன்றவைகள்தான் செய்வார்கள்!
பார்த்திபன்
சர்வதேச நாணய நிதியம் இப்போ பூச்சாண்டி காட்டினாலும், பிறகு பல்லை இழித்துக் கொண்டு கொடுக்கத் தான் போகின்றது. இலங்கை அரசிற்கு கடனை வழங்காது போனால், நாளை உரிமையோடு ஐ.நாவோ அல்லது செஞ்சிலுவைச் சங்கமோ அகதிகள் விடயத்தில் தலையிட முடியாமல் போகலாம். இலங்கை அரசும் இலகுவாக தனக்கு அகதிகளைப் பராமரிக்க போதிய நிதிவசதி இல்லையென கைவிரித்தாலும் விரிக்கும். எனவே இந்த விடயத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பூச்சாண்டி பலிக்கப் போவதில்லை. பொறுத்திருந்து பாருங்கள்.
BC
Aappu, தங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.
msri
எங்களால் முடியாததது எதுவும் இல்லை?> என தம்பட்டம் அடிப்பவர்கள்> ஏன் 1.9பில்லியன்க்கு கையேந்துகின்றார்கள்!
aappu
எம்ஸ்றி அவர்களே, நீங்கள் கூறியதுபோல் பேரினவாத அரசு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளை புறம்தள்ளி, இந்தியா- சீனா போன்ற நாடுகளோடு உறவு கொண்ட காரணத்தால், சர்வதேச நிதிநாணயம் கடனை சுணக்குவது சரிதான் என்றால்… கடந்த முப்பது வருடங்களாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் நமது நாட்டில் என்ன செய்தது என்பது உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா? இந்தியா- சீனா போன்ற நாடுகளின் உதவியால் இலங்கையில் இன்று பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளதை நீங்கள் உண்மையில் விரும்பவில்லையா? மனச்சாட்சி உள்ள எந்தத்தமிழனும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பது எனது தனிப்பட்ட கருத்து. மன்னிக்கவும்.