இத்தாலிய பாராளுமன்றமானது அந்நாட்டிலுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு தண்டனையளிக்கும் புதிய சட்ட மூலத்தை நிறைவேற்றியுள்ளது. புதிய சட்ட விதிகளுக்கு அமைய சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு 4276 ஸ்ரேலிங் பவுண் முதல் 8553 ஸ்ரேலிங் பவுண் வரையான தண்டப் பணம் விதிக்கப்படவுள்ளது.
கடந்த மே மாதம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்படி சட்ட மூலம் வியாழக்கிழமை பாராளுமன்ற மேல்சபையான செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து சட்டமாக அமுலாக்கப்படும் அந்தஸ்தை பெற்றுள்ளது.
இந்த புதிய சட்டமானது சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு தண்டனையாக பெருந்தொகை தண்டப்பணம் விதிப்பதற்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தங்க வைத்திருப்பவர்களுக்கு மூன்று வருடத்துக்கு மேலான சிறைத் தண்டனை வழங்குவதற்கும் வழிவகை செய்கிறது.
புதிய சட்ட விதிகளுக்கு அமைய சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு 4276 ஸ்ரேலிங் பவுண் முதல் 8553 ஸ்ரேலிங் பவுண் வரையான தண்டப் பணம் விதிக்கப்படவுள்ளது. அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து வைப்பதற்கான காலமும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளது. இந்த புதிய சட்ட அமுலாக்கத்திற்கு மனித உரிமைக் குழுக்களும் வத்திக்கானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.