யாழ். மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளுக்கான தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான பயற்சி செயலமர்வுகள் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வாக்காளர்கள் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபைத் தேர்தலுக்காக இம்முறை 500 அரச உத்தியோகத்தர்களும் யாழ். மாநகரசபைத் தேர்தலுக்கென இம்முறை ஆயிரம் அரச உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தேர்தல் தொடர்பான முன்னோடி நடவடிக்கைகள் எவ்வித தங்கு தடையுமின்றி இடம்பெற்று வருவதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.