தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சர்வகட்சி குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களிடமே ஜனாதிபதி தனது தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நீண்டநேரம் தனியாகச் சந்தித்து பேசிய ஜனாதிபதி கூட்டமைப்பினரை அடுத்த வாரமளவில் தனியாக சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை அவர் இம்மாதத்திற்குள் சந்திப்பார் என்றும் அதற்கான அழைப்பு ஜனாதிபதியின் செயலாளர் ஊடாக விரைவில் அனுப்பப்படும் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
aappu
கூத்தமைப்பு புலிகளுடன் ரகசியம் பேசிப்பேசி அவர்களை கூண்டோடு அழித்து விட்டார்கள்.தற்போது ஜனாதிபதியுடன் ரகசியம் பேசுவதற்கு தாளம் போடுவது ஏன்? புலிகளிடம் காட்டிய பாச்சா மகிந்தாவிடம் பலிக்காது ஐயா. கவனம்.
நண்பன்
இவர்களது அஸ்தமனம் அதிக தூரத்திலில்லை. இவர்கள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
முகாமுக்கு வந்த மக்கள் குறித்து எதுவித கரிசனையுமின்றி, போரை நிறுத்தி புலிகளை காப்பது குறித்த விடயங்களில் மட்டும் செய்பட்டவர்கள் இவர்கள். இனி, இவர்களை மக்கள் கவனிப்பார்கள். இவர்கள்தான் தமிழரின் அழிவுக்கு விதை போட்டு, இந்த அழிவுக்கு கொண்டு செல்லக் காரணமானவர்கள்.
palli
இருவரும்; பேசுங்கள் இரு இன மக்கள் பற்றி அவர்கள் வாழ்வு நோக்கி; பேசாதீர்கள் கடந்த கால கழிப்புணர்வு பற்றி புலியோடு வாழ்ந்த காலம் பற்றி;
msri
சந்திப்பதில்>பேசுவதில் பிரச்சினை இல்லை!> தமிழமக்கள் அவலம் நீங்க பேசுவீர்களா? நடைமுறைப்படுத்துவீர்களா?
rony
சந்திப்பதும் பேசுவதும் பதவிக்காகவும் சுயநலத்திற்காகவுமென்றால் எதற்கையா வெட்டிப்பேச்சு? இன்னும் யாரை ஏமாற்ற இந்த நாடகம்? தேர்தல் இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டும்.
vanthijathevan
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது ஐந்து வருட பதவிக் காலத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் தொகையை சம்பாதிப்பதோடு ஓய்வூதியமும் பெற முடியும். இவர்களுக்கு பதவிக்காலம் முடிய கொஞ்ச நாடகளே உண்டு. குறை நிலையில் உள்ள இந்த லாபங்களை கைப்பற்றிக் கொள்ளவே இந்த முடிவுகளுக்கு வந்தார்கள். புலிகள் அதிகாரங்களைக் கைப்பற்றப் போவதாக கனவு கண்டு தான் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் சட்டத்துறை அமைச்சர் என சொல்லித் திரிந்தவர் சிறிகாந்தா. இவர்கள் இல்லையென்று யார் அழுதார்கள்?
மக்களுக்கு சேவை செய்யும் அரிச்சுவடியே தெரியாத இவர்கள் தமிழரின் சாபக் கேடு. புலியோடு சேர்ந்து இவர்கள் ஆடிய ஆட்டங்களை மக்கள் மறக்க மாட்டார்கள.