உலகின் சந்தோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 22ம் இடம் வழங்கப்பட்டுள்ளது. திங்க டேங் என்ற புதிய பொருளாதார நிறுவகத்தனால் வெளியிடப்பட்டுள்ள இந்த தரவரிசைப்பட்டியலின் படி, உலகின் மிகவும் சந்தோசமான நாடாக கொஸ்டாரிகா தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கும் நாடுகள் பல, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளாக காணப்படுவதாகவும், அபிவிருத்தி அடைந்த நாடுகள் பெரும்பாலும் இடைநிலையிலேயே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்ற போதும், சந்தோசமான நாடுகளின் பட்டியிலில் 22 ம் இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்பட்டுள்ளது. அத்துடன், இந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெற்ற நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உலகின் வல்லரசுகளாக கணிக்கப்படும் பல நாடுகள் இந்த தரவரிசையில் பின்னத்தள்ளப்பட்டுள்ளன. இங்கிலாந்துக்கு இதில் 74ம் இடமும், அமெரக்காவிற்கு 114 ம் இடமும், கனடாவிற்கு 88 வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலைகள், அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி காணப்பட்டாலும், அதனை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சந்தோசமாக வாழக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோதல்களின் பின்னரும், அதனால் பாதிக்கப்பட்ட வடுக்கள் நிறைந்திருந்தாலும், இலங்கை 22ம் இடத்தில இருக்கின்றமை விசேடமான அம்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
katham
அந்த 21 நாடுகனளயும் என்னவென்று பதிவிடுங்கள் – நன்றி
chandran.raja
சந்தோஷ்சத்தை எப்படி மதிப்பீடு செய்கிறது என்ற விபரத்தை இந்த நிறுவனம் சொல்லை வில்லையே? கடகம் நிறையச் சமான்வாங்க சந்தைக்கு போனால் கடகம்நிறைய பணநோட்டு கொண்டு போகவேணுமே! அதுவா சந்தோஷ்சம். மூன்றாம் உலகநாடுகளின் வறுமையை தாங்கிக் கொள்ளுங்கள். மோசமாக மாறிவரும் பணவீக்கத்திற்கெதிராக எந்தவித போராட்டத்தையும் நடத்தாது மகிழ்சியாக இருங்கள். சந்தோஷ்சப்படுங்கள் போன்ற திட்டமிட்ட குளையடிப்பே இந்த புள்ளிவிபரக் கணக்கு.
msri
மனிதப் படுகொலைகளை> மனிதப்பேரவலத்தை> ஏற்படுத்துவதில்> தனிநபர்+தனிக்கட்சி ஆட்சிமூலம் மக்களை அடக்கி ஒடுக்குவதில்! பத்திரிகையாளர்களை கொலைசெய்வதில்> ஐனநாயகத்தை இல்லாதொழிப்பதில்> பாசிச சர்வாதிகாரிகளுக்கு ஓர் அலாதியும் ஆனந்தமுமே! அந்தவகையில் இலங்கைகு 22வது இடம்! அடுத்த வருடம் முதல் 10-ற்குள் வந்துவிடும்!
aappu
உண்மையை ஏற்றுக்கொள்ள ஏனோ சிலர் அடம்பிடிக்கின்றார்கள். இன்று 22வது இடத்திலிருக்கும் எமது பொன்னாடு இன்னும் ஒருசில வருடகாலத்தில் முதலாவது இடத்தை எட்டும் என்பது அசைக்கமுடியாத உண்மை. நம்நாட்டு தண்ணீரிலுள்ள சுவை வேறெந்த நாட்டிலும் உண்டா?
palli
//உண்மை. நம்நாட்டு தண்ணீரிலுள்ள சுவை வேறெந்த நாட்டிலும் உண்டா?//
உன்மைதான் இரு இன இரத்தம் கலந்த நீர் அல்லவா எமது நாட்டு தண்ணீர்; இப்போது பாகிஸ்தான் ஈராக் போன்றநாடுகளிலும் இதுபோன்ற தண்ணீர் உண்டென பேசிக்கிறார்கள்;
msri
எங்கள் நாடு இன்னும் சில வருடங்களில் “எந்தச் சநதோசத்தில்” முதலாவது இடத்ததை எட்டும் என்பதை சொல்வீர்களா ஆப்பு?
aappu
சிறிலங்கா எனும் எங்கள் நாடு வெகுவிரைவில் சகல இனத்தவர்களும் சமமாகவாழக்கூடிய சந்தோசத்தில் முதலிடமான நாடாகவருவதற்கு முதலில் சிறி போன்றவர்களுக்கு தன்னம்பிக்கையும் தன்நாட்டுப்பற்றும் அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.தூங்குபவனை எழுப்பலாம்-நடிப்பவனை எப்படி எழுப்பமுடியும்?
msri
ஆப்பு!
எங்கள் நாட்டில் சகலஇன மக்களும் சமமாக வாழக்கூடிய சந்தோச நிலையை> ஏற்படுத்த வேணடியது அரசே! அதற்கான அரசியல் சூழ்நிலை எம்நாட்டில் உள்ளதா? நீங்கள் முழுமுதற் கடவுளாக கனவு கண்டு போற்றி வணங்கும் மகிநதாவே> தமிழ் மக்கள் பிரச்சினைக்கு (13- வதற்கு) சர்வஐன வாக்கெடுப்பு நடத்தப்போகின்றாராம்! இதை இவர் நடாத்தி>தமிழ்மக்களுக்கு சமமான வாழ்வு முதலாம் நம்பர் சந்தோசம் எல்லாம் வருமா? இப்போக்கில் மகிநத அரசின் எதில் நம்பிக்கை வைக்கச் சொல்கின்றீர்கள்! நீங்கள் கல்லில் நார் உரிக்கலாம் என நம்புகின்றீர்கள்! இந்த மூடநம்பிக்கையை நம்பாவிட்டால் அது நடிப்பா?
aappu
நீங்கள் ஏன் மகிந்தாவை கடவுளாக்குகின்றீர்கள். அவர் ஒரு ஜனாதிபதி மட்டுமே. நாட்டில் ஒரு அரசு உண்டு, பாராளுமன்றமும் உண்டு. இந்தியா போன்ற அயல்நாடுகள் விரும்பும் 13வதற்கு ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டினால் மட்டும் போதாது. நாட்டுமக்கள் அங்கீகரம் தேவை. அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால் அது தவறா? இதுவரை பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நாடு இப்போதுதான் ஓரளவு நிம்மதி கண்டுள்ளது. இனிமேல் படிப்படியாகத்தான் நாம் முன்னேற வேண்டும். கையில் நம்பிக்கையெனும் உளி இருந்தால் கல்லிலென்ன இரும்பிலும் நார் உரிக்கலாம். மூடநம்பிக்கையை விடுத்து திடநம்பிக்கையுடன் வாழுங்கள். நமக்கும் நல்ல காலமுண்டு பொறுத்திரு மகனே. எமது நம்பிக்கை என்றும் வீண்போகாது. “நமோ நமோ மாத்தா,நம் ஸ்றி-லங்கா”…நன்றி……
நண்பன்
அப்பு சொல்வது நிச்சயம் நிஜமாகும். சிறீ போன்றவர்கள் சாவுகளை வெற்றிகளாக கொண்டாடியவர்கள். இவர்களுக்கு மனிதர் வாழ்வது கசக்கவே செய்யும். குடும்பம் மகிழ்வாக இருக்க கணவன் மட்டும் விட்டுக் கொடுத்துப் போனால் போதாது , மனைவியும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். அதே போல இனப் பிரச்சனை தீர மகிந்த மட்டும் முயன்றால் போதாது , அதைப் பெற நினைக்கும் தமிழரும் அதை நம்ப வேண்டும். நம்பிக்கைதான் வாழ்கை.
புலிகளோடு இருந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்பது புலிகளின் குறிக்கோளாக இருந்தது. இன்று உயிர் வாழ்வோர் குறித்து முதலலைக் கண்ணீர் வடிக்க புலிகளுக்கு எந்த அருகதையும் இல்லை. இராணுவத்தை நோக்கி வந்த போதே அவர்கள் சிறீலங்காவின் பிரஜைகள் என்றாகி விட்டது. அவர்களை வாழ வைக்கும் பொறுப்பு சிறீலங்கா அரசையே சார்ந்தது.