காலியில் நேற்று ஆரம்பமாகிய இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர்பான தமிழ் நேர்முக வர்ணனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் முழு நேரமாக ஒலிபரப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் தொடர்பாக 30 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ஏ.எம்.எச். அஸ்வர் தமிழ் மொழியில் நேர்முக வர்ணனையை செய்கிறார்.
இதுவரை காலமும் கிரிக்கெட் போட்டி நேர்முக வர்ணனை முழு நேரமாக சிங்கள மொழியிலும் இடையிடையே ஆங்கில, தமிழ் மொழிகளிலும் நடத்தப்பட்டு வந்தன. இனிமேல் தமிழ் மொழியிலும் முழுநேரமாக நேர்முக வர்ணனை இடம்பெறுமெனவும் அஸ்வர் தெரிவித்தார்.
காலியில் நேற்று காலை 10 மணிக்கு இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. நேற்று ஆட்டமுடிவின் போது இலங்கை அணி முதலாவது இனிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. முதலாவது இனிங்சில் பாகிஸ்தான் அணி 2 விக்கட் இழப்புக்கு 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.