முல்லைத்தீவு மக்களால் ஈழம் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை நிவாரணக் கிராமங்களில் உரியவர்களிடம் கையளிக்க இராணுவத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு ஈழம் வங்கியில் அடகு வைத்த நகைகளை படையினர் அண்மையில் மீட்டனர். அடகுவைத்தவர்களின் விபரங்களுடன் கூடிய தங்க நகைகள் அடங்கிய 8709 பொதிகளை படையினர் கைப்பற்றியிருந்தனர்.
அடகு வைத்தவர்களுக்கு வழங்கிய பற்றுச்சீட்டின் பிரதிகள் நகையுடன் பொதி செய்யப்பட்டு வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் தேடுதல்களை மேற்கொண்ட இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1040 தங்க வளையல்களையும் கண்டெடுத்துள்ளனர்.
852 பெரிய தங்க வளையல்களும், 188 சிறிய தங்க வளையல்களும், 45 தங்க வளையல் துண்டுகள், கைச்சங்கிலி என்பவற்றையும் படையினர் மீட்டுள்ளனர்.
vanthijathevan
அவ்வளவு தானா கணக்கில் உள்ளது? மிகுதியெல்லாம் எங்கே?
chaan
இவ்வலவாவது கிடைத்தது என்ரு சந்தோசப்படுங்கல்
பார்த்திபன்
vanthijathevan,
சில வருடங்களாக புலிப்பினாமிகள் அரச வங்கிகளிலுள்ள தமிழர்களின் பணங்களை, அரசு முடக்கி யுத்தத்திற்கு அந்தப் பணங்களை பாவிக்கப் போகின்றார்கள் என்று புரளிகளைக் கிளப்பி, அதனால் தமிழர்கள் தங்கள் பணங்களையெல்லாம் வன்னியிலுள்ள புலிகளின் வங்கியில் வைப்பிலிடுங்கள் என்று ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் செய்திகளைப் பரப்பினார்கள். இப்போ வன்னியில் புலிகளின் வங்கியில் வைப்பிலிட்ட பணத்தை நீங்கள் வாங்கித் தருவீர்களா??
vanthijathevan
இப்போது அரசு கண்டு பிடித்ததாக கூறும் அளவை விட அதிகமான தொகை வைப்பிலிடப்பட்டிருக்க வேண்டும். அவை வன்னி மக்கள் வியர்வை சிந்தி பாடுபட்டு உழைத்த செல்வமாகும். அவ்வளவுதான் இராணுவம் கண்டு பிடித்ததென்றால் இராணுவ வீரர்கள் அநுராதபுரம் பகுதியில் நகைகளை விற்க திரிந்நதாக செய்திகள் வெளிவந்தனவே (அதுவும் வன்னிப் பகுதியில் பணிபுரிந்த ராணுவத்தீனர்). அப்படி எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டிருக்கும்?
இப்போ வன்னியில் புலிகளின் வங்கியில் வைப்பிலிட்ட பணத்தை நீங்கள் வாங்கித் தருவீர்களா”
அதுதான் பிரபாகரனின் மகனிடத்திலும், சூசையின் மனைவியிடத்திலும் புதைக்கப்பட்ட ஆயுதங்களாகவும் வெளிப்பட்டதே.
மாயா
இதைக் கூட அரசு தெரியப்படுத்தாமல் இருந்திருக்கலாம். அதை தெரியப்படுத்தியமை அதன் நல்லெண்ணத்தையே காட்டுகிறது. புலிகளது வங்கியில் இடப்பட்ட பல கோடி பணத்தை புலிகள் இறுதி நேரத்தில் தமது ஆவணங்களோடு எரித்து விட்டார்கள். கொஞ்சம் பணம் மக்களிடமும் மாட்டியது. அதை அவர்கள் , இராணுவப் பகுதிக்கு வரும் போது கொண்டு வந்து முகாமில் உள்ள தற்காலீகமாக அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளார்கள்.
வன்னிப் புலிகளிடம் வைப்பிலிட்டது இருக்கட்டும் ,புலத்துப் புலிகளிடம் கொடுத்த பணத்தை முடிந்தால் இனி மீட்டெடுங்கள் பார்க்கலாம்? பலர் வங்கிகளில் இவர்களை நம்பி கடன் வாங்கி கொடுத்து முழித்துக் கொண்டிருக்கிறார்கள்?