நுரைச் சோலை அனல் மின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பார்வையிட்டார்;. ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் ஜோன் செனவிரட்ன, மிலிந்த மொறகொட, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அதிகாரிகள் இப்பயணத்தில் இணைந்துகொண்டனர். இதன் முதற்கட்டப் பணிகள் அடுத்தாண்டு பூர்த்தியடைகின்றன.
முதற்கட்டத்தில் 300 மெகவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாhம் கட்டத்தின்மூலம் 600 மெகவொட் மின்சாரம் கிடைகும். இரண்டாம் கட்டப் பணிக்கு 891 மில்லியன் டொலர் செலவிடபடவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சீன அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
இதேவேளை, இலங்கையின் மின்சாரத் தேவையை ஈடுசெய்யும் நோக்கில் இலங்கையின் இரண்டாவது அனல் மின் நிலையம் திருகோணமலையில் அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தம் இந்திய அரசுடன் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் எமது இணையத்துக்குத் தெரிவித்தார்.