சர்வதேச ஜனநாயக சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை பிரித்தானியா நோக்கி பயணமானார் என்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச ஜனநாயக சங்கதின் உப தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்படுகின்றார். அத்துடன் ஜனநாயக சங்கதின் ஆசிய வலய பிரிவின் தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.