யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து பொறியியல் பீடத்திற்கு 25 பேரும் மருத்துவபீடத்திற்கு 12 பேரும் உட்பட 93 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி அதிபர் வி.கணேசராஜா தெரிவித்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 2008 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான “Z”வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையிலேயே இம்மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
இதனடிப்படையில் கணிதப் பிரிவிலிருந்து பொறியியல் 20, பொறியியல், பொறியியல் 1, கணிய அளவையியல் 2, கணினி விஞ்ஞானம் 4, அளவையியல் விஞ்ஞானம் 1, தகவல் தொழில்நுட்பம்8, பௌதீக விஞ்ஞானம் 5, கனிப்பொருள் வளங்களும் தொழில்நுட்பமும்4 என்ற அடிப்படையில் 49 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
விஞ்ஞான பிரிவிலிருந்து மருத்துவம் 12, மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் 1, உணவு விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் 1, உணவு விஞ்ஞானமும் போசாக்கும் 1, விலங்கு விஞ்ஞானமும் மீன்பிடியும்1, விவசாயம்7, பிரயோக விஞ்ஞானம்1, உயிரியல் விஞ்ஞானம் 3, யுனானி மருத்துவமும் அறுவை சிகிச்சையும் 1, நீர்வாழ் வளங்கள் தொழில்நுட்பம்1, சித்த மருத்துவம் 3 என்ற அடிப்படையில் 32 பேர் தெரிவாகியுள்ளனர்.
அத்துடன் வர்த்தக பிரிவிலிருந்து சொத்து முகாமைத்துவமும் மதிப்பீடும் 1, வணிகவியல் 1 என்ற அடிப்படையில் 2 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். மேலும் கலைப்பிரிவிலிருந்து கலை2, கலை (வெகுஜன ஊடகம்) 4, கலை (அரங்கக்கலை) 4 என்ற அடிப்படையில் 10 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.