இலங்கை இனப்பிரச்சினைக்கான தமது தீர்வுத்திட்டம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்னரே வரும் எனவும் ஆனால், சமஷ்டி தீர்வுக்கு இலங்கையில் இடம் கிடையாது எனவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார் என இந்தியாவின் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றினை மேற்கோள்காட்டி பீ.பீ.ஸி தமிழ் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
தனது அரசியல் தீர்வுத்திட்டமான, ‘’13 வது அரசியல் யாப்புத் திருத்தத்தை சற்று மேம்படுத்திய திட்டம்’’ குறித்து பேசியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது மனதில் ஒரு தீர்வுத்திட்டம் இருப்பதாகவும், ஆயினும், அது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தை விவாதித்து பெற வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தான் இவற்றுக்காக காத்திருப்பதாக கூறியுள்ள ஜனாதிபதி, இருந்தபோதிலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் தேர்வு செய்யப்பட்ட பின்னரே தீர்வுத்திட்டம் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். அதேவேளை, எதனை கொடுக்க வேண்டும், எதனைக் கொடுக்கக் கூடாது என்று தனக்கு தெரியும் என்றும், மக்கள் தனக்கு அதற்கான ஆணையை தந்திருப்பதாகவும், அதனை தான் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, தான் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உடன்பாட்டுக்காக காத்திருப்பதாக, கூறியுள்ள ஜனாதிபதி, அவர்களுக்கு எது கிடைக்கக் கூடியதாக இருக்கும், எது கிடைக்காது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியிருப்பதுடன், இந்த நாட்டில் ‘’சமஷ்டிக்கு’’ இடம் கிடையாது என்றும், தேசிய நல்லிணக்கத்துக்கு பல்லினங்களின் கலப்பு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய அப்பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று இலட்சம் மக்களையும் விரைவில் மீளக் குடியமர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகுமெனவும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஒரு மாதகாலம் கடந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்துப் பிரச்சினகைளுக்கும் தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது எனவும், தெரிவித்துள்ள ஜனாதிபதி இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் பெருந்தொகை நிதியை ஒதுக்கியுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், இவற்றின் பிரதிபலன்களை விரைவில் காண முடியுமெனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் சுபீட்சத்துக்காகவே இந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
vanthijathevan
மகிந்தராஜ பக்சவிற்கு சந்தேகம் தோன்றி விட்டது. மூன்று லட்சம் மக்களை அகதியாக அடைத்து வைத்துக் கொண்டு தமிழர் பிரச்சனைக்கு தீர்வும் வைக்காமல் தமிழர்களின் வாக்குகளைப் பெற முடியாது. அத்தோடு போரில் அரசு நடந்து கொண்ட விதமும் மக்கள் மனதில் மாறாத வடுவாக உள்ளது. தான் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால் தமிழர்கள் தமக்கு வாக்களித்து தன்னை பதவியில் அமர்த்த வேண்டும் என்ற மறைமுக நெருக்கடியை மகிந்த தமிழருக்கு கொடுக்கவுள்ளார்.
anpu
இத்தனை வருடங்களாக போராட்டம் என்ற பெயரில் பிரபா செய்த அடாவடிகளின் பாதையை பின்பற்றி போரில் வெற்றிகண்ட மகிந்தா அதேபோல பொங்கலுக்குத் தமிழீழம் தீபாவளிக்குத் தமிழீழம் மாவீரர் உரையின்பின் இறுதிப்போர் என்றெல்லாம் பிரபா கதையளந்து கொண்டிருந்தமாதிரி இப்போ மகிந்தா இனப்பிரச்சினைக்குத் தீர்வுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவ்வளவேதான். இதுவும் தமிழீழம் கண்ட மாதிரி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பார்த்திபன்
ஒருவேளை மகிந்த தற்போதுள்ள சூழ்நிலைலயை வைத்து, ஜனாதிபதித் தேர்தலை முதலிலேயே நடாத்தி மீண்டும் தான் பதவிக்கு வர விரும்பலாம். அதற்காக இனப்பிரைச்சினைக்கான ஒரு நியாயமான தீர்வை முன் வைப்பதில் காலதாமதம் செய்தால், அது மீண்டும் பாரதூரமான பிரைச்சினைகளையே உருவாக்கும். எனவே இராணுவ வெற்றியை வைத்து தேர்தல் வெற்றிகளை மட்டும் குறிக்கோளாக கருதிச் செயற்படாமல், தமிழ்மக்களின் பிரைச்சினைகளைத் தீர்ப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அது தான் நாளை ஒரு உன்னத இலங்கையை கட்டியெழுப்ப வழி சமைக்கும்.
palli
//ஒருவேளை மகிந்த தற்போதுள்ள சூழ்நிலைலயை வைத்து, ஜனாதிபதித் தேர்தலை முதலிலேயே நடாத்தி மீண்டும் தான் பதவிக்கு வர விரும்பலாம். அதற்காக இனப்பிரைச்சினைக்கான ஒரு நியாயமான தீர்வை முன் வைப்பதில் காலதாமதம் செய்தால், அது மீண்டும் பாரதூரமான பிரைச்சினைகளையே உருவாக்கும். எனவே இராணுவ வெற்றியை வைத்து தேர்தல் வெற்றிகளை மட்டும் குறிக்கோளாக கருதிச் செயற்படாமல், தமிழ்மக்களின் பிரைச்சினைகளைத் தீர்ப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அது தான் நாளை ஒரு உன்னத இலங்கையை கட்டியெழுப்ப வழி சமைக்கும்.//
பல்லியின் நீண்டநாள் கருத்து இதுவே; அதுவே இன்று பார்த்திபன் கருத்தும் என்பதில் பல்லிக்கு திருப்தி;தமிழரை நேசிக்கும் அனைவரது கருத்தும் ஓர் நாள் ஒன்றாக இருக்கும்;அன்று மிருகங்களுக்கு அங்கு இடம் இருக்காதும்; அதுவரை புலம்புவதும் அலம்புவதும் எமது கடமைதானே;
நண்பன்
இன்றைய சூழலில் தமிழர் பிரச்சனைகளை திடமாகவும் விவேகமாகவும் முன்னெடுத்து தீர்ப்பதற்கும் , ஏனைய இனவாதக் கட்சிகளின் குரல்களை தணிப்பதற்கும் அதிபர் மகிந்தவின் திட்டம் சரியானதே.
இத் தேர்தல் இவ்வருட இறுதிக்குள் வரலாம். அதற்கான சமிக்கைகளே அதிகம் தெரிகின்றன. இலங்கையில் சமாதானத்தை கொண்டு வருவதான கோஸத்துடனேயே அனைவரும் ஆட்சிக்கு வந்தனர். அவர்களது நோக்கம் ஒன்றாக இருந்தாலும் , வழிகள் வெவ்வேறு. புலிகளால் அவை தடைப்பட்டே வந்தன.
இன்று நாட்டின் பயங்கரவாதத்துக்கான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் வன்னியிலிருந்து வந்த மக்கள் இருக்கும் முகாம்களைத் தவிர வெளியே பெரிய பிரச்சனைகள் இல்லை. அதில் முன்னர் இருந்த , உயிர் பயம் என்பது இலங்கை வாழ் மக்களிடம் 95 விழுக்காடு இல்லாமல் போயுள்ளது. சிங்களப் பகுதிகளில் எங்காவது ஒரு குண்டு வெடிக்கும். வெளியே போகும் ஒருவர் மீண்டும் வீடு வருவோமா என்ற சந்தேக அவலம் இல்லாமல் போயுள்ளது. இந்த யுத்த பீதியால் இரவு வேளை மகிழ்வாக சினிமாக்களுக்குக் கூட மக்கள் போவதை தவிர்த்தனர். இவை மனித மனங்களில் அழுத்தங்களாகவே இருந்தன. இதனால் சிங்கள கலைஞர்கள் கூட பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். ஏனைய பொருளாதார ரீதியிலான தொழில் துறைகளிலும் வளர்ச்சிகளும் மந்த நிலையே. விலைவாசி உயர்வுக்கு யுத்தம் மிக முக்கிய காரணமாகியது. இன்று பாமர மக்களுக்கு மனதில் ஆறுதல் தரும் விடயமாக யுத்த வெற்றி கொள்ளல் மட்டுமல்ல, சமாதான முன்னெடுப்பு குறித்த கருத்துகளோடு நடக்கும் சிங்கள தொலைக் காட்சி சம்பாஷனைகள் மக்களை நோக்கி கொண்டு செல்லப்படுகிறது. இனியொரு பயங்கரவாத பிரச்சனை ஒன்று நாட்டில் தொடராமல், இந்த மகிழ்ச்சி தொடர வேண்டுமானால் , இலங்கை வாழ் மக்களுக்கு உயிர் அச்சமில்லா வாழ்வுக்கான உறுதி தேவை. அதற்கு நாட்டில் நிரந்த சமாதானம் தேவை. இன்னோரு பிரபாகரனின் உயிர்த்தெழுதல் தேவையா? உங்களுக்கு அமைதி தேவையா? என்றால் அமைதிதான் என சிங்கள மக்கள் சொல்வர். அநேக தமிழர்கள் ஆயுத கலாச்சாரத்திலிருந்து விடுபடாமல் இருப்பது இணைய ஊடல்களால்தான். அவை அடிப்படை தமிழரின் கருத்தாகாது. இனி தமிழை வைத்து அரசியல் நடத்த முடியாது. இன்று தமிழருக்கும் அமைதி வாழ்வுதான் தேவை. அது மகிந்தவால் மட்டுமே கொடுக்க முடியும் என்பதை இலங்கை வாழ் அனைத்து மக்களும் இன்று உணருகின்றனர். மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட இடதுசாரிகளும் இதே கருத்தைக் கொண்டுள்ளார்கள். இதுவே யதார்த்தம்.
இனி ஒரு போதும் தமிழ் – சிங்கள இனவாதம் மக்களிடம் செல்லாது. இந்த இனவாதம் பொதுமக்களது வாழ்வாதாரத்தை சேதப்படுத்தியுள்ளது. இவை இனி தலை தூக்கவே கூடாது. அவை குறித்த கருத்துகள் நிச்சயம் இத் தேர்தல் வழி பிரசாரத்தினூடக சாதாரண பொது மக்களிடம் கொண்டு செல்லப்படும். அது இன ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கம் என்பதாகவே இருக்கும். இவை பழுது பட்டுள்ள மனங்களை ஆற்றி புதிய நம்பிக்கையை மனித மனங்களில் கொண்டு வரும். இதனால் கிடைக்கும் வாக்குகள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அனைத்து மக்களும் கொடுக்கும் அதிகாரமாகவே பிரசாரப்படுத்தப்பட்டு கணிக்கப்படும். இது ஒருவிதத்தில் ஒரு பொதுசன வாக்கெடுப்பாகவே கருத்துக் கொள்ளலாம்.
இத் தேர்தலில் இனவாதம் பேசுவோர் நிச்சயம் அரசியலில் இருந்து அஸ்தமனம் ஆவர். அதில் மகிந்தவுக்கு நெருக்குவாரம் கொடுக்கும் ஜேவீபியின் ஒரு பிரிவும் , சிகள உருமயவும், ஒன்று இல்லாமல் போகும் அல்லது தமது தொனியை மாற்றிக் கொண்டு சமாதானத்தின் நோக்கத்தை ஏற்றுக் கொள்ளும்.
தமிழர் கூட்டமைபின் பலம் இல்லாமலே போய்விடும். பல வேளைகளில் இது இவர்களது அஸ்தமனமாகக் கூட இருக்கும். சிலர் மகிந்தவோடு இணைவர். என்னைப் பொறுத்தவரை இவர்களது அஸ்தமனம் மகிழ்வானது. அன்று புலிகளது அழிவு தமிழருக்கு பாதுகாப்பற்றதாக இருக்கும் என்று இருந்த தவறான மதிப்பீடும் எண்ணமும் தற்போது இலங்கை வாழ் தமிழரிடம் மாறி வருகிறது. புலிகளின் கடும் ஆதரவாளர்களுக்குள் மட்டும் அந்த பயம் இன்னும் இருக்கிறது. இவர்களைத் தவிர அரசு சார்பு தமிழ் கட்சிகள் வெற்றி பெறும் சாத்தியக் கூறுகள் அதிகம்.
ஐதேகட்சியைப் பொறுத்த வரை, கட்சிக்குள் உள்ள பிளவுகள் காரணமாக அதுவும் பலவீனப்படும். ரணிலின் பேச்சு வன்மை சிங்களவர்களை வெற்றி கொள்ளப் போதுமானதாக இல்லை. அங்கே தலைமைக்கான போட்டிகள் கட்சியை சினா பின்னமாக்கியுள்ளது.
எனவே மகிந்த எதிர்பார்க்கும் வெற்றி நிச்சயம் என்பது என்பது மட்டுமல்ல, முரண்பாடுகள் மற்றும் எதிர்ப்புகள் இல்லாத நிலையில் , இலங்கை வாழ் மக்களுக்கான சம உரிமைகளை கொடுப்பதற்கு மகிந்தவுக்கு கிடைக்கும் வாக்குகள் அல்லது மக்கள் வரமாகவே கருதப்படும். இதுவே குறிக்கோள். மகிந்தவுக்கு கிடைக்கும் வெற்றி நிரந்தர சமாதானத்துக்கான வெற்றியாகவே நிச்சயம் இருக்கும்.
தவிரவும் 180 நாட்களுக்குள் முகாம்களில் உள்ள மக்களில் ஓரளவாவது தம் பகுதிகளுக்கு மீள் குடியமர்த்தப்பட்டு , அது தமிழர் மனங்களில் நம்பிக்கையை கொடுக்கும். அவை ஏற்கனவே செயலில் தொடங்கப்பட்டு விட்டன. அது தமிழர் வாக்குகளை மட்டுமல்ல , நிரந்தர சமாதானத்தின் நிஜத்தையும் எடுத்தியம்பும்.
இத் தேர்தல் தமிழர்களை விட , சிங்கள இனவாதிகளின் எதிர்ப்புகள் இல்லாமல் தமிழருக்கான உரிமைகளை கொடுப்பதற்கும் , நிரந்தர சமாதானத்துக்கான வழியாகவும் இத் தேர்தல் அமைவது இன்றியமையாதது. இது சரியான நேரத்தில் மகிந்த எடுத்த சரியான முடிவாகவே இருக்கிறது. இங்கே மகிந்தவை பலப்படுத்த தமிழர்கள் முயல வேண்டும். இல்லாத போனால் அதுவே தமிழருக்கு வினையாகி , இன்னொரு வரலாற்றுத் தவறாகிவிடும்.
சிங்களவர்களது மட்டுமல் தான் உரிமைகளை கொடுக்க விரும்பும் தமிழர் வாக்குகளினாலுல் வெற்றி பெறும் மகிந்த, செய் நன்றிக் கடனுக்காக தமிழருக்கு நல்லது செய்வார் என்று நிச்சயம் நம்பலாம்.
நன்றி
msri
தெற்கில் மகிந்தா திமிர்க்கோலம்!
வடக்கில் டக்ளசு திருமணக்கோலம்!
எது வழங்கவேண்டும்> எத வழங்கக்கூடாது என்பது எனக்குத் தெரியும்> நான் வழங்குவதை மட்டும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்! என பாசிச-சர்வாதிகாரியான மகிந்தா பேரினவாதத் திமிருடன் சொல்லியுள்ளார்! அத்துடன் 13-வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என தனது சக கூட்டாளிகளுக்கு உறுதியளித்துள்ளார்! இது ஒருபுறம் மறுபுறத்தில் யாழில் மகிந்தாவை; தொழுதுண்டு வாழும்>டக்ளசு மணவறையில்> ஐயர் மந்திரம் ஓத> மாலை மங்கல வாத்தியம் முழங்க> மாப்பிளைக்கோலத்தில் தேர்தல் தீருமணம் செய்யுறர்! ஒரு மந்திரி மாப்பிளைத் தோழனாக வீற்றிருக்கின்றர்! வடக்கின் வசந்தத்திறுகு இப்படி ஓர் கோலமோ?
மகுடி
// எது வழங்கவேண்டும்> எத வழங்கக்கூடாது என்பது எனக்குத் தெரியும் – msri on July 6, 2009 11:46 pm //
இது சிங்கள இனவாதக் கட்சிகளுக்கு மகிந்த கொடுத்த அதிரடி வைத்தியம் என்பதை அறிவீர்களா சிறீ? 13வது திருத்தச் சட்டத்தை எதிர்த்தவர்களுக்கு மகிந்த கொடுத்த பதில் அது. பறவையை விட்டு சிறகை பிடித்தால் இப்படித்தான்.
msri
இலங்கையில் சிங்கள இனவெறி> பேரினவாதமாக மாறி> 60-ஆண்டுகள் ஆகின்றன! இதன் இன்றைய் தலைவன் மகிந்தா! இவர் இன்னொரு பாசிசப் பிரபாகரனே! சொல்லில் அன்பு கருணை சமத்துவம் சகோரத்துவம் நாம் ஓர் தாய் வயிற்றுப் பிள்ளைகள் என உதிரும்! நடைமுறை இன ஒடுக்கல்> இனப் படுகொலை மனிதப் பேரவலம்போன்ற சர்வாதிகார நடவடிக்கைகளே! இதுவே மகிந்த சிந்தனை! இதை எம்போன்றோர்கள் சொன்னால்> பலி முத்திரை குத்தி> மகிந்தாவை “மனுநீதி கண்ட சோழன்” ஆக்குகினறார்கள்! இதுவரை வந்த ஐனாதிபதிகளில் (என்ன மீசையும்- கழுத்தில் சிவத்த “டேன்சர்” துண்டு சுத்துவதும்)வித்தியாசமானவர்>தேர் ஓன்று கட்டி அதில் இருத்தி எல்லோரும் வடம் பிடித்து இழுவை செய்யவேண்டும்! பிள்ளைத்தண்டில் வைத்துக் காவவேண்டும்! குறைந்தது மூன்று முறையாவது வழிபடவேணுடும் என்கின்றனர் அவரின் பக்த கோடிகள்! நம்புங்கள் நல்லவன்> நல்லதே செய்வார் என பஐனை பாடுங்கள்! எங்களை அரகரமாதேவா சொல்லச்சொல்லுங்கள்! நாம்…..
msri
மகுடி!
சிங்கள இனவாதக் கட்சிகளுக்கும்> மகாநாயக்க தேரோக்களுக்கும்> “13-வது திருத்த்ததை நடைமுறைப்படுத்த மாட்டேன்> என மன்றாட்டமாக சொன்னது> உமது அகராதியில் அதிரடி வைத்தியமோ? நான் வழங்குவதை மட்டும் (பிச்சையை) தமிழ்மக்கள் ஏற்கவேண்டும் என்பது> பேரினவாத திமிராக தெரியவில்லையோ? இதிலிருந்து எது(தஙகத் தாமபாளத்தில்) தருவார் என்பது > மகிநத ஊதல்காரர்களுக்கு இலங்கையின் முதலாவது சந்தோசமாகவே கட்புலன்களில் தெரியும்!
rohan
“இன்றைய சூழலில் தமிழர் பிரச்சனைகளை திடமாகவும் விவேகமாகவும் முன்னெடுத்து தீர்ப்பதற்கும் , ஏனைய இனவாதக் கட்சிகளின் குரல்களை தணிப்பதற்கும் அதிபர் மகிந்தவின் திட்டம் சரியானதே.”
என்னே அருமையான கருத்து!
தனது அலையின் உச்சத்தில் இருக்கும் போது ஒரு தீர்வை முன் வைப்பதை விட பொருளாதாரச் சிக்கலகள் மக்களுக்குப் புரிய ஆரம்பித்து தனது புகழ் மங்கி திணறும் போதே மகிந்த தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும்.
vanthijathevan
புலி மக்களிடமிருந்து அகற்றப்பட இருபது ஆண்டுகள் ஆயிற்று. மகிந்த அகற்றப்பட அவ்வளவு காலத்தை நாம் அனுமதிக்க கூடாது.
mano
டக்ளஸ் பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கிறார். எங்களுக்குப் பால் தான் தேவை. மாடுகளுக்கு நற்போதனை செய்து பால் கறக்க முடியாது.
மாயா
பலிகள் எப்போதுமே யதார்த்தத்தை உணர்ந்ததில்லை. உள்ள விட்டும் வெளிய விட்டும் அடித்தவர்கள். அடி வாங்கியவர்கள். தலைவருக்கு எல்லாம் தெரியும் என்று பீற்றினீர்கள்? பலிகளின் பிரபாகரன் மகிந்தவைத்தான் யதார்த்தவாதி என்றான். அப்படியென்றால் உங்கள் தலைவன் துரோகியா? இல்லை முட்டாளா?
thevi
டக்ளஸ் பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கிறார். எங்களுக்குப் பால் தான் தேவை. மாடுகளுக்கு நற்போதனை செய்து பால் கறக்க முடியாது”
ஆனால் மாடு பின்னங்காலால் உதைக்கிறதே. எவ்வளவு பால் எப்ப தருவதென நான்தான் முடிவு செய்வேன் என்கிறதே. மாடு நல்லதென்றால் தான் பால் கிடைக்கும்.
பார்த்திபன்
மாயா,
பிரபாகரனை முட்டாளென்று ஒத்துக் கொண்டால், அவரைப் பின்பற்றியவர்கள் படு முட்டாள்களாகவல்லவா இருப்பார்கள். அதனால் பிரபாகரன் முட்டாளென்பதை இவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
BC
பார்த்திபன், தலைவரின் செயல்கள் ஒவ்வொன்றையும் தலைவர் என்ன மாதிரி திறமையாக காய் நகர்த்துகிறார் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்கள் நம்ம ஆட்கள். கடைசியில் தலைவர் எப்படி காய் நகர்த்தினார் என்று தெரியும் தானே!
mohan
Great