நாட்டில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை 92 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவினால் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணைக்கு ஆதரவாக் 103 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர். வாக்களிப்பு நடைபெற்ற நேரம் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.