வீட்டு வேலைக்காக அமர்த்தப்படுகின்ற வேடுவப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக ஆதிவாசிகளின் வேடுவத் தலைவர் ஊருவரியகே வன்னி அத்தோ தெரிவித்தார். இன்றைய நாகரிக உலகில் எமது ஆதிவாசிகளும் தேசிய நீரோட்டத்தில் இணைவது காலத்தின் தேவை. இதனால் வனப் பிரதேசத்தில் மட்டுப்படுத்தப்பட்ட எமது சமூகத்தை வெளியுலகிற்குக் கொண்டுவருவதற்குப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றவேளை எம் இளம் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் பிரயோகிக்கப்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அண்மைக்காலமாக எமது இனத்தைச் சேர்ந்த இளம் வயதினர் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இருப்பினும் அவர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவது மாத்திரமல்லாது வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியுள்ளனர்.
இவர்கள் இருவரைப் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து சிறுவர் நன்நடத்தைப் பிரிவினர் மீட்டெடுத்ததாகவும் அவர்கள் இருவரும் கொழும்பிலுள்ள நன்நடத்தை முகாமில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஊறுவரியகே வன்னி அத்தோ கடும் விசனத்துடன் தெரிவித்தார்.
jeveithan
கணேசலிங்கங்கள் எங்கும் இருக்கிறார்கள்.
சாந்தன்
கணேசலிங்கங்கள் மட்டுமல்ல கருணாக்கள், பிள்ளையான்கள், ஸ்ரீலங்கா ராணுவம் போன்றவர்களும் இருக்கிறார்கள்!
msri
சாந்தன்!
மக்கள் மலர் தூவிப் போற்றிடும்> ஓர் அரசு இயந்திரத்தையும்> அதன் சக்கரவர்த்திகளையும்> குப்பைத் தொட்டிக்குள் துர்க்கி எறிந்து விட்டீரே!