அவுஸ் திரேலியா – இங்கிலாந்து ஆணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது.
இங்கிலாந்து ஆஷஸ் தொடர் அணி அறிவிப்பு:
கார்டிஃப் மைதானத்தில் இன்று துவங்கும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஹார்மிசன் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக கிரகம் ஆனியன்ஸ் இடம் பெற்றுள்ளார்.
மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. அதேபோல் ரவி பொபாரா அணியில் இடம் பெற்றிருந்தாலும் இயன் பெல்லும் ஒரு மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மொன்ட்டி பனேசர் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அணி விவரம்: ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் (கப்டன்), அலைஸ்டர் குக், ரவி பொபாரா, கெவின் பீட்டர்சன், போல் கொலிங்வுட், இயன்பெல், மேட் ப்ரையர், பிளின்டாஃப், ஸ்டூவார்ட் பிராட், கிரேம் ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர் சன், கிரகம் ஆனியன்ஸ் மொன்ட்டி பனேசர்.
அவுஸ்திரேலிய விபரம் வருமாறு:- பிலிப் கூச், சைமன் கடிச், ரிக்கி பொண்டிங் (கப்டன்), மைக்கல் கிளார்க், மைக்கல் ஹஸி, மார்ஷல் நேகர்தி, பிராட் ஹடின், மிச்சல் ஜோன்சன், நாதன் ஹரிட்டஸ், பீட்டர் சிடில், ஸ்டுவர்ட் கிளார்க், பென் ஹில்பென்ஹஸ் .