இலங் கையின் கிழக்கு மாகாணத்தில் நெடுஞ்சாலைகளிலுள்ள காவல் துறையினரின் சோதனைச் சாவடிகளும், வீதித்தடைகளும் கனிசமான அளவில் தற்போது அகற்றப்பட்டுள்ளதால், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்கள் எளிதாகியுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் அதிகமான வீதித்தடைகள் அகற்றப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு இடையேயான பயண நேரம் பாதியளவாக குறைந்துள்ளதாக வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர். முன்னர் போல கெடுபிடிகள் ஏதுமின்றி தங்களால் பயணிக்க முடிவதாகவும் பயணிகள் கூறுகிறார்கள்.