ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், அபாரமாக பந்துவீசி வரும் பிரட் லீ திடீரென இடது விலா எலும்பில் ஏற்பட்ட வலி காரணமாக ஸ்கேன் எடுக்க லண்டன் அனுப்பப்பட்டுள்ளார். இதனால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
சோபியா கார்டன்ஸில் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியில் பிரட் லீ கலந்து கொள்ளவில்லை. மேலும், இந்தத் தொடர் முழுதும் அவர் விளையாடுவதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.