மீன்களை தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலையொன்றை தெற்கில் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். நியுசிலாந்து நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இத்தொழிற்சாலை காலி மாவட்டத்திலுள்ள அக்மீமன என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்துக்கு இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கையில் பயங்கரவாதம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மீன்பிடித்தடைகள் நீக்கப்பட்டதால் இப்போது மீன்பிடித்துறை அபிவிருத்தியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.