தனது குழந்தைகளைக் கொலை செய்த பின் தற்கொலை செய்ய முயன்ற தாய்

Rita Ariyaratnam with her childrenஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இத்துயர சம்பவத்தில் ஏழு மாத இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தனர். மகப்பேற்றுக்குப் பின்னான மனஉளைச்சலுக்கான மாத்திரைகளை அதிகமாக உட்கொண்ட நிலையில் தாயும் குழந்தைகளுக்கு அருகில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஆபத்தான நிலையைக் கடந்து உடல்நிலை தேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கிழக்கு பேர்த் பகுதியில் உள்ள குளோவர்டேல் பகுதியில் வாழும் செல்வின் அரியரத்தினம் எனபவரின் குடும்பத்திலேயே இப்பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. யூலை 6ம் திங்கட்கிழமை மாலை 3:30 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பிய அரியரத்தினம் அவரது குழந்தைகளான லாச்லன், சொஃபீ ஆகிய இருவரும் மனைவி றீட்டாவும் வரவேற்பறையில் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். அவர்களுக்கு அருகில் றிட்டாவுக்கு மருத்துவர்களால் வழங்கப்பட்ட மனஉளைச்சலுக்கான மாத்திரைப் போத்தலும் காணப்பட்டது.

உடனடியாக ‘000’ அவசரசேவைக்கு அவசர அழைப்புவிடுத்தார். மருத்துவ வண்டி வரும்வரை றீட்டாவின் இதயத்தை தொடர்ந்தும் இயக்குவதற்கான செயன்முறைகளை தொலைபேசியில் வழங்க அரியரத்தினம் அதனை மேற்கொண்டார். மருத்துவ வண்டி வந்தடைந்ததும் றீட்டா றோயல் பேர்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குழந்தைகள் இருவரும் பிறின்சஸ் மார்கிரட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்கள் மருத்துவமனையை அடைகையில் உயிரிழந்தனர்.

குழந்தைகளின் தாயார் றீட்டா பிரசவத்தை அடுத்து ஏற்பட்ட அழுத்தக் குறைவு காரணமாக பல நாட்களாக கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் என்று நெருங்கிய உறவினர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். குழந்தைகளின் பெற்றாரான இளம் தம்பதியர் எதுவித பிரச்சினைகளுமின்றி திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் என்று இக்குடும்பத்தின் நெருங்கிய நண்பி ஒருவர் தெரிவித்தார்.

Twins_Ariyaratnamஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரு குழந்தைகளுடன் திருப்திகரமாக வாழ்ந்து வரும் இக் குடும்பத்தின் இளம் தாயார் நீண்ட காலமாக குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தார் என்றும் இது தற்செயலாக ஏற்பட்ட கர்ப்ப தரிப்பு அல்ல என்றும் அந்த குடும்ப நண்பி மேலும் கூறினார். தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட திருமதி றீட்டா அரியரத்தினம் ஒரு அன்பான தாய் என்றும் அவருக்கு அழுத்தக் குறைவு நோய் ஏற்பட்டதும் இதற்கு சிகிச்சை பெற்றதும் அவ்வேளையில் தமக்கு தெரியாது என்றும் அந்த நண்பி கூறினார்.

அவருக்கு டாக்டரினால் வழங்கப்பட்ட மருந்துகள் வீட்டில் காணப்பட்டன என்று சிரேஷ்ட பொலிஸ் சார்ஜன்ட் மார்க் ஃபை தெரிவித்துள்ளார். எந்த விதமான மருந்துகள் என்று தெரிவிக்காத அவர் மருந்தை அளவுக்கதிகமாக அவர் உட்கொண்டிருப்பாரென தாம் கருதுவதாகவும் கூறினார்.
குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை தம்மால் கூற முடியாதிருக்கிறது என்று தெரிவித்த பொலிஸ் சார்ஜன்ட் குழந்தைகளின் பிரேத பரிசோதனை முடிவு கிடைத்த பின்னரே உத்தியோகபூர்வமாக காரணத்தை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

தாய் தனது குழந்தைகளை கொலை செய்து தன்னையும் அழித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் இது முதற்சம்பவம் அல்ல. கனடாவில் சில ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது. கடந்த ஆண்டு லண்டனிலும் இவ்வாறான ஒரு துயரம் நிகழ்ந்தது. (அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன், கனவிலும் தோண்றாத கொடூரம் – தமிழ் குழுந்தைகள் மரணம் பெற்றோர் கைது!!!) வேறு வேறு நாடுகளில் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்ற மூன்று சம்பவங்களிலுமே இரு குழந்தைகளும் கொல்லப்பட்டனர். தாய்மார்களின் தற்கொலை முயற்சி தோல்வியடைந்து அவர்கள் காப்பாற்றப்பட்டனர். தமிழ் மக்கள் மத்தியில் மன அழுத்தம் மன உளைச்சல் போன்றவற்றின் தாக்கம் முழுமையாக உணரப்படவில்லை. குறிப்பாக பெண்கள் மத்தியில் அவர்களது பிரசவத்திற்கு முன் பின்னாக இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • vanthijathevan
    vanthijathevan

    புலம் பெயர் முதலாளித்துவ நாடுகளில் தடுமாறும் நம்மவர் வாழ்வின் அவலங்களின் இன்னொரு சாடசியம்.

    Reply
  • Constantine
    Constantine

    If you want to blame something – blame capitalism – Why did we all come here anyway???

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    இங்கு பொருளாதார வசதிகள் நவீன உபகரணங்கள் எல்லாம் இருந்தும் குடும்ப வாழ்வில் அமைதி இல்லை. அன்னியோன்யம் இல்லை. ஆறுதல் புரிந்துணர்வு இல்லை. மனிதாபிமானம் இல்லை. குழந்தை பராமரிப்பில் தந்தையின் பங்களிப்பு ஆணாதிக்கத்தின் பாற்பட்டது. அவ்வளவு லேசில் உதவ வர மாட்டார். தன்னுடைய தேவைகளையும் மனைவியே செய்து தர வேண்டும் என எதிர்பார்ப்பார். குழந்தையைக் கொடுப்பதோடு அவர் கடமை முடிந்தது. ஆனால் தாயின் வழமையான கடமைகளுடன் மேலும் சுமைகள் அதிகரித்து சமாளிக்க முடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இலங்கையில் ஒரு பெண் குழந்தை பெற்றால் அவள் ஏழையாய் இருந்தாலும் வசதியானவளாக இருந்தாலும் உறவுகள் அயலவர் ஊரவர் மத்தியில் மிகுந்த ஆதரவு கிடைக்கும். அவளை யாரும் தொந்தரவு செய்வதில்லை. கைக்குழந்தைக்காறி என கொண்டாடுவார்கள். ஒரு மகாராணி மாதிரி நடத்தப்படுவாள்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    புலம் பெயர்ந்த பின் , வாழும் நாடுகளுக்கேற்ற வகையில் பலர் தம்மை மாற்றிக் கொள்ளாதிருக்கின்றனர். அவர்கள் தாம் வாழ்ந்த தமது சொந்த நாட்டு கலாச்சாரத்தோடு நிர்பந்திக்கப்பட்டு அழுத்தி வாழ முற்படும் போது மன அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். இவை தமது பிரச்சனைகளை வைத்தியர்களோடு அல்லது குறைந்தது தமது நண்பர்களோடாவது பகிராமையால் இப்படியான வேதனையான முடிவுகளுக்கு ஆளாகின்றனர்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    வாழும் நாடுகளுக்கேற்ற வகையில் பலர் தம்மை மாற்றிக் கொள்ளாதிருக்கின்றனர். அவர்கள் தாம் வாழ்ந்த தமது சொந்த நாட்டு கலாச்சாரத்தோடு நிர்பந்திக்கப்பட்டு அழுத்தி வாழ முற்படும் போது மன அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்”

    சொந்த நாட்டு கலாச்சாரத்தோடு நிர்பந்திக்கப்பட்டு அழுத்தி வாழுமாறு முதலில் நிர்ப்பந்திப்பது கணவனே. உதாரணமாக கைக்குழந்தையுடைய வீட்டடிற்கு விருந்தினர் எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு உணவு சமைத்து பரிமாறி கவனித்து அனுப்புமாறு கணவன் கட்டளையிடுவான். விருந்தினர்களும் இந்த நாட்டு நிலைகளை புரியாதவர்கள். தாயும் என்ன நினைப்பார்களோ கணவன் திட்டுவானோ என மேலதிகமாய் வேலை செய்வாள். நாட்டு நிலை பெண்களின் வேலைப் பளு அவர்களின் உடல் நிலை மன நிலை குறித்து இங்கு யாரும் கவலைப்படுவது இல்லை. இது ஒரு பாரதூரமான பிரச்சனை. எல்லோரும் சேர்ந்தே ஓரளவிற்கேனும் இதை குறைக்க முயல வேண்டும்.

    Reply