இந்தியா வில் பரஸ்பர சம்மதத்துடன் ஒரு பால் உறவு வைத்துக் கொள்வதை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு்ள்ளது.
இது தொடர்பாக வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், ஒரு பால் உறவினரின் உரிமைகளுக்குப் போராடும் நாஸ் பவுண்டேசன் என்ற தன்னார்வ அமைப்புக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சுரேஷ் குமார் கெளஷல் என்ற ஜோதிடர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.