வடக்கு, கிழக்கு மாணவர்கள் கடந்த 30 வருட காலமாக இழந்தவற்றை மீளப்பெற்றுக் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீளக் கிடைத்த பிரதேசங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்தியைப் போல், கல்வியையும் விளையாட்டையும் சமமாக மேம்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் மறைந்து கிடக்கும் திறமைகளைத் தேடி வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென்றும் நேற்று (09) மாலை பிலியந்தலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்,
இன்று பெற்றோர்களுக்கு அச்சம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் மறைந்து கிடக்கும் வளங்களைத் தேடிச் செல்லும் தருணம் பிறந்துள்ளது. 30 வருடங்களாக இல்லாமற் போனதை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும்.
துள்ளி விளையாட வேண்டிய குழந்தைகளின் கரங்களில் துப்பாக்கிகளைக் கொடுத்தார்கள். துப்பாக்கிகளைக் கழற்றிப் பூட்டக்கூடிய 11, 12 வயது பிள்ளைகள் இன்று முகாம்களில் இருக்கிறார்கள. இவர்கள் அனைவரும் இழந்தவற்றை மீளப்பெற்றுக் கொடுப்போம். எதிர்வீரசிங்கம் போன்ற விளையாட்டு வீரர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உருவானார்கள். அவ்வாறானவர்களை மீண்டும் நாம் உருவாக்குவோம். அபிவிருத்தியை ஒரு பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம் என்றார்.
Kumaran
ஜனாதிபதி வடக்கு கிழக்கு மக்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பல உறுதி மொழிகளை அளித்துள்ளார்.
வெளிநாட்டில் வாழும் நாம் அதற்கு இடையூராக பிரசாரம் செய்யாமல் நம்பிக்கையுடன் செயல்படுவோம்.
மகுடி
நல்லது செய்யுங்கள். புலிகள் செய்தவை கொலை மட்டுமே…………
rajah
yes now we are want this way thanks
rohan
//ஜனாதிபதி வடக்கு கிழக்கு மக்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பல உறுதி மொழிகளை அளித்துள்ளார். வெளிநாட்டில் வாழும் நாம் அதற்கு இடையூராக பிரசாரம் செய்யாமல் நம்பிக்கையுடன் செயல்படுவோம்.//
உறுதி மொழிகளுக்கு அவை எழுதப்படும் கடதாசியின் மதிப்புக் கூட இல்லை!ஆனால் அந்த உறுதி மொழிகளை வைத்து உலகெங்கும் பிரசாரம் நடக்கும். நாமெல்லாம் ஆமாம் சாமி போட வேண்டும் என்றா சொல்ல வருகிறீர்கள்?
மகிந்த ஒரு உருப்படியான மனிதராக இருந்தால் இப்படி அந்த வன்னி மருத்துவர்களை வைத்து நடாத்தப்பட்ட கூத்தை எப்படி அனுதித்திருக்க முடியும்? வன்னியிலிருந்து வந்த ஒவ்வொருவருக்கும் அரச இராணுவம் எப்படி மனித உயிர்களையும் உணர்வுகளையும் மதித்தது என்று தெளிவாகத் தெரியும்.
யாம் ஒன்றும் குற்றம் என்று முரண்டு பிடிக்கும் தலைவர்களிடமிருந்து ஒரு மண்ணாங்கட்டியையும் எதிர்பர்க்க முடியாது. தமது புகழ் உச்சியில் இருக்கும் போது செய்யாத ஒன்றை மகிந்த எப்போ செய்யப் போகிறார்? ஆனால், வெளிநாட்டில் வாழும் நாம் அவரை நம்பி அவருக்கு இடையூராக பிரசாரம் செய்யாமல் வாழ்ந்து மகிழ்வோமாக!