உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை 8.1 சதவீதத்தால் அதிகரிப்பு!

tourism.jpgஇலங் கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 8.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை உல்லாசப் பயண அபிவிருத்தி அதிகார சபையின் இயக்குணர் நாயகம் கலைச்செல்வம் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 363 வெளிநாட்ட உல்லாசப் பிரயாணிகள் இலங்கை வந்தனர். இவ்வருடம் இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 87 ஆயிரத்து 729 ஆகக் குறைந்தது. குறிப்பாக மேற்கு ஐரோப்பாää தெற்காசிய நாடுகளிருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.

எனினும் இவ்வருடம் மே மாதம் இலங்கையில் பயங்கரவாத  நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் பெருந்தொகையான வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வர ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாகவே கடந்த வருடத்தை விட இவ்வருடம் இலங்கை வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் முதல் அதிகரித்துள்ளது.

இலங்கையில் உள்ள உல்லாசப் பிரயாண ஹோட்டல்களில் சகல அறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த வருடம் சுமார் 5 லட்சம் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இலங்கை வருவார்கள் என்றும் அதன் மூலம் பெரும் இலாபம் அடைய முடியும் எனவும் எதிர்பார்கிறோம் எனவும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • இளங்கோ
    இளங்கோ

    அமெரிக்கா போன்ற நாடுகள் தமது நாட்டு பிரஜைகளை இலங்கைக்கு போக வேண்டாம் என கூறியுள்ளார்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    அமெரிக்க ஆயுத வியாபாரம் டல் அடித்து விட்டதாலும் , தன் அடியாளைக்(பிரபாவை) கொன்று போட்டதாலும் வந்த கோபம் இது. உலகத்துக்கு பாடம் புகட்ட முனைந்த பிரபாவுக்கு ஒரு பாடம் புகட்டவே அமெரிக்கா சில இழுத்தடிப்புகளை செய்தது. அது பிரபாவை கொல்ல அல்ல. ஆனால் சிறீலங்கா அமெரிக்காவுக்கே பெப்பே காட்டிவிட்டது. அதனால்தான் இறுதி நேரத்தில் தனக்கு என்ன நடந்தது என அமெரிக்காவுக்கு தெரியும் என்கின்றனர். புலித் தலைமையை காப்பாற்ற ஒரு கப்பலையுமல்லவா தயாராக வைத்திருந்தார்கள்?

    புலிகளை சரணடைய வைத்தது அமெரிக்காதான். மண்டையில் போட அறிவுரை கொடுத்தது இந்தியா. மண்டையில் போட்டது சிறீலங்கா.

    இன்றும் அமெரிக்காதான் கேபீயை காப்பாற்றுகிறார்கள். ராஜீவ் கொலைக்கு லிங்க் எடுத்துக் கொடுத்தவர் என்பதால். நாளை இதே அமெரிக்காவால் (CIA)கேபீயும் சாகடிக்கப்படுவார். அத்தோடு நாடு கடந்த தமிழீழம் உலக சரித்திரத்தைக் கடக்கும். இது சிறீலங்கா அமெரிக்காவுக்கு செய்யும் கைமாறு நன்றி என்ன என்பதிலேயே அடக்கம். இந்த மாற்றம் விரைவில் நிகழும்.

    Reply
  • theevan
    theevan

    tourist numbers has been incresed recently but stil colombo streetss is very narrow and airport look like a london sweets shop. no improvement. can this leaders look other country and do a little bit?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    என்னுடைய இம்மாதச்சம்பளம் 1000% ஆல் அதிகரித்துள்ளது!
    ஆச்சரியப்படுகிறீர்களா? நான் போன மாதம் வேலை இல்லாமல் இருந்தேன். இம்மாதம் 1000 சம்பளம்!

    Reply
  • rohan
    rohan

    //என்னுடைய இம்மாதச்சம்பளம் 1000% ஆல் அதிகரித்துள்ளது!
    ஆச்சரியப்படுகிறீர்களா? நான் போன மாதம் வேலை இல்லாமல் இருந்தேன். இம்மாதம் 1000 சம்பளம்!//

    உங்கள் சென்ற மாதச் சம்பளம் 100 என்றால் மட்டுமே 1000 என்பது 1000% மாற்றம். சென்ற மாதச் சம்பளம் 91 என்றால் 1000% வீத அதிகரிப்பு.

    Reply
  • romeo
    romeo

    இலங்கைக்கு உல்லாசப்பிரயாணிகளின் வருகை அதிகரிக்க வேண்டுமெனில் ஆகாய விமானக்கட்டணம் இன்னும் குறைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் சகல நாட்டு பிரயாணிகளும் தடைகளையும் பொய் பிரச்சாரங்களையும் உடைத்துக்கொண்டு நிட்சயமாக பெருமளவில் இலங்கைக்கு பிரயாணம் செய்வார்கள். அங்கேதான் தற்போது எந்த பிரச்சனையும் இல்லையே. பொய்யென்றல் போய் பாருங்கள் தெரியும் கட்டணம் குறைந்தால் மட்டும். குறைப்பார்களா சம்மந்தப்பட்டவர்கள். காத்திருப்போம்.

    Reply
  • மகுடி
    மகுடி

    விமான கட்டண குறைவு என்பது , யாரும் பயணிப்பதில்லை என்பதன் மறைமுக செய்தி.

    Reply