இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது. இப்போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களில் முன்னணியில் உள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதன் இன்னிங்சில் 36 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட் டுக்களையும் இழந்து 90 ஓட்ட ங்களை எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய இலங்கை அணி 48 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது. ஐந்து நாட்களைக் கொண்ட இந்த டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 16ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ்
குஹரம் மன்சூர் 03
பவாட் அலிம் 16
யூனுஸ் கான் 00
மொஹமட் யூசுப் 10
மிஸ்பஹா உல் ஹக் 00
சுஐப் மலிக் (ஆ.இ) 39
கம்ரன் அக்மல் 09
அப்துர் ரவூப் 00
உமர் குர் 01
மொஹமட் அஹமர் 02
சஹீட் அஜ்மல் 00
உதிரிகள் 10
மொத்தம் 90
பந்து வீச்சு:
குலசேகர 9-3-21-4,
துஷார 8-3-23-2,
மென்டிஸ் 10-3-20-3,
மெத்திவ்ஸ் 3-0-15-1,
ஹேரத் 6- 3-5-0
இலங்கை அணி முதல் இன்னிங்ஸ்
வர்ணபுர 11
பரணவித்தாரன 26
சங்கக்கார (ஆ.இ) 81
ஜயவர்தன 19
சமரவீர (ஆ.இ) 13
உதிரிகள் 14
மொத்தம் 164
பந்துவீச்சு:
உமர்குல் 10-1-28-1,
மொஹமட் அஹமர் 9-2-30-0,
அப்துல் ரவூப் 8-1-31-0,
சஹீட் அஜ்மல் 15-1- 45-2,
யூனூஸ்கான் 06-1-21-0.